xvi
தமிழ்நாட்டு விளையாட்டுகள்
எல்லைவரைதான் தாக்கத்தை உண்டாக்க முடிந்தது. ஆனால், பாவாணர் காலத்தில் அப்படியில்லை. ‘உலகத் தமிழ்க்
கழகம்‘ எனும் அமைப்புத் தொடங்கப்பட்டபோது உறுப்பினர் அனைவரும் தனித்தமிழ்ப்
பெயர் தாங்கத் தொடங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் பல குடும்பங்களில்
நல்ல தமிழ்ப் பெயர்கள் வைக்கப்பட்டன. (‘தேவி‘ இதழில் சிலகாலமாகத் தொடர்ந்து
வந்த பட்டியல்களிலிருந்து உணரமுடியும்),
திராவிட இயக்க அரசியல் தலைவர்களும்
பலருக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டினர். இது பெருவழக்காகி ஒரு பெரிய மறுமலர்ச்சியே
ஏற்பட்டது.
அந்த வகையில் ‘இயக்கம்‘ என்று பார்த்தால்
மறை மலையடிகள் காலத்தைவிடப் பாவாணர் காலம் பெரிய வளர்ச்சியைக் கொணர்ந்தது
என்பதை மறுக்கமுடியாது.
எனினும் பாவாணர் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் நேரத்தில்
ஒரு வினாவை எழுப்பலாம்.
இன்றும் அதே தனித்தமிழ் இயக்கம் வலிமையோடு செயற்படுகிறதா?
பாவாணர் காலத்தின் தாக்கத்தினும் பெரிய தாக்கம் ஏற்பட்டுவிட்டதா? நண்பர்கள்
ஆழ்ந்து சிந்திக்கட்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர்;
அவர் துணைவியாரும் ஒரு கல்லூரிப் பேராசிரியை. இருவரும் தங்கள் பெண்குழந்தைக்குச்
"சுஜாதா" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை;
அதில் 15 பேர் பணிபுரிகின்றனர். தமிழால் பெருமை பெற்ற, தமிழால் பெருமை பெற்ற,
தமிழால் வாழும் அந்தப் பேராசிரியர்களின் சம்பளப் பதிவேட்டில் மூன்று பேர் மட்டுமே
தமிழில் கையொப்பமிடுகின்றனர். பிறர் அனைவரும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம்
இடுகின்றனர். இந்தக் கொடுமையை யாரிடம் போய்ச் சொல்வது?
இப்படி எண்ணற்ற சிதறல்கள்,
சிதைவுகள், சின்னபின்னமான நிலைகள். இவற்றை எப்படிச் சரிப்படுத்தப்
போகிறோம்?
மற்றொன்று, பாவாணரின் வாழ்நாள்
குறிக்கோளாகிய ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி‘.
8.5.1974-ல் ‘செ.சொ.பி. அகரமுதலித்
திட்ட இயக்ககம்‘ தொடங்கப்பட்டது. பாவாணர் அதன் இயக்குநரானார். ஆனால்
16.1.1981-ல் அவர் மறைவு நிகழ்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குள் அகரம் தொடங்கி
‘ஆசைமொழி‘ வரை மட்டுமே அவரால் எழுத முடிந்தது. அந்த நூலும் 1985-ல் தான் வந்தது.
1992இல் அடுத்த தொகுதி. எனினும்
2001-க்குள் மேலும் இரண்டு மூன்று தொகுதிகள் வந்துவிட்டன. விரைவில் ‘த‘ வரையிலான
தொகுதிகள் வெளியிடப்படக்கூடிய ஏற்பாடுகள் முடிந்திருக்கின்றன.
இதில் எனக்கு இரண்டு மனக்குறைகள் உண்டு.
பாவாணர் தம் முதுமையை உணர்ந்து 1974 முதல் 1980-க்குள் தாம் கருதும் அனைத்துச்
சொற்களுக்குமுள்ள தம் ஆராய்ச்சிக் குறிப்பினைச் சுருக்கெழுத்தாளர்