xxxiv
தமிழ்நாட்டு விளையாட்டுகள்
ஆரியர், தமிழ் மன்னரை அடிமையாக்கிப் பண்பாட்டைக் கெடுத்ததோடு அல்லாமல்
தமிழ்மொழியை அழிக்கவும் கெடுக்கவும் திட்டமிட்டுச் செயல்பட்டனர்.
கடல்கோள்களால் அழிந்தவை போக எஞ்சிய பன்னூற்றுக் கணக்கான நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டும்
ஆற்று வெள்ளத்தில வீசப்பட்டும் அழிக்கப்பட்டன.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நாலாம் தமிழ்ச் சங்கந் தோற்றுவித்த
பாலவநத்தம் பாண்டித்துரைத் தேவர் மதுரையம்பதியில் அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த
கணக்கற்ற நூல்களும், ஏட்டுச்சுவடிகளும் தமிழ்ப் பகைவரால் தீயிடப்பட்டு அழிந்தொழிந்தன.
1974-ல் நடைபெற்ற 4ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் போது
தமிழர் சிங்களர் கலகத்தால் யாழ்ப்பாணம் நூலகம் சிங்களவரால் அழிக்கப்பட்டது.
தேவாரத்தில் காணப்படும் தனித்தமிழில் இருந்த ஊர்ப்பெயர்
இறைவன் பெயர்களும் சமற்கிருதத்தில் மாற்றப்பட்டன.
மயிலாடுதுறை
மாயவரம்,மாயூரம்
பழமலை,முதுகுன்றம்
விருத்தாசலம்
பெருவுடையயார்
பிரகதீஸ்வரர்
பிறவிமருந்திறைவர்
பவஒளஷதீஸ்வரர்
புற்றிடங்கொண்டார்
வன்மீகநாதர்
கூடுதுறையார்
சங்கமேஸ்வரர்
மாதொருபாகன்
அர்த்தநாரீஸ்வரர்
இந்தப் பணி இன்னும் தொடர்பின்றது. எழில்மிகு சென்னை சிங்காரச் சென்னை என்று
மாறியுள்ளது.
ஊர், ஊரவை, ஊராட்சி, ஊராட்சிமன்றம், ஊராட்சி ஒன்றியம் என்னும் தனித்தமிழ்ப்
பெயர்களிருக்கக் கிராம சபை என்று தமிழினத் தலைவர் என்றும், தமிழை வளர்ப்போர்
என்றும் பறைசாற்றுபவர்களாலேயே பரப்பப்பட்டு வருகிறது.
எல்லாரும் இப்படியா? விதிவிலக்காகச் சிலர் இருந்தனர்.
அவருள் சிலர் சங்க காலத்திலும் இருந்தனர். சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர்
வி.கோ.பரிதிமாற்கலைஞர், வரலாற்றுப் பேராசிரியர்கள் பி.தி.சீனிவாசையங்கார்,