தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Vannai


xxxviii
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
சொல்லாய்வறிஞர் பலர் பாவாணர் வழிநின்ற சொல்லாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லாய்வறிஞர்க்குப் பொறுமை, இலக்கணப் புலமை, அயராவுழைப்பு, மொழியார்வம் நிறைந்திருக்க வேண்டும்.
முனைவர் இரா.மதிவாணன், ப.அருளி, முனைவர் கு.அரசேந்திரன், புலவர் இரா.இளங்குமரன், முனைவர் இரா.கு.ஆல்துரை, சாத்தூர்ச் சேகரன் ஆகியோர் தம்மைச் சொல்லாய்வில் ஈடுபடுத்தி உழைத்துவருகின்றனர். இப் பணி மேலும் பெருக வேண்டும்.
பாவாணர் கோட்பாடுகள்

1.  மாந்தன் தோன்றிய இடம், அழிந்துபோன குமரிக்கண்டமே.
2.  மாந்தன் பேசிய முதன்மொழி தமிழே; அதுவே ஞால       முதன்மொழி.
3 . தமிழ் திரவிடத்துக்குத் தாயும், ஆரியத்துக்கு மூலமும் ஆகும்.
4.  தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள்.
5.  இற்றைத் தமிழிலக்கியத்திற்கு அணியாய் இருப்பதும், தமிழன்   தான் இழந்த உரிமைகளைப் பெறதற்கு ஆவணம்போல் உதவுவதுப் தொல்காப்பியம் ஒன்றே.
தன்னம்பிக்கை
 
1.  அகரமுதலிப் பணிக்காகவே இறைவன் என்னைப் படைத்தான்.
2.  என் நூல்களுள் தலைசிறந்ததும், வேறெவராலும் செய்ய முடியாததும், தமிழின் தலைமையை நிலைநாட்டுவதும் அகரமுதலிப் பணி ஒன்றே. என் ஆராய்ச்சியின் முழு விளைவும் அஃதே.
3.  இறுதியில் என் நூல்களால்தாம் தமிழுக்கும் தமிழர்க்கும் நலம் பிறக்கும். அதனைப் பின்னர்க் காண்பீர்கள்.
4.  மறைமலையடிகட்குப் பின் தமிழ்த் தூய்மை பேணும் பேராசிரியன் யான் ஒருவனே.
5.  என் புலமையைப் பொறுத்த வரையில் மறைமலையடிகள் ஒருவரே மதிப்புரையோ முன்னுரையோ வழங்கத் தக்கவர்.
6.  என் திருக்குறள் தமிழ் மரபுரை ஒன்றே என் தகுதியைப் பெயர் காட்டப் போதும்.
பண்புநலன்கள்
பாவாணர் குழந்தை உள்ளத்தினர்; கள்ளங் கவடில்லாதவர்; குழந்தையேயாயினும் பாண்புடன் பரிவுகாட்டிப் பழகுபவர்; தமக்குச் செய்யப்பட்ட உதவி தினைத்துணையாயினும் பனைத்துணையாக் கொண்டு பாராட்டும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:26:09(இந்திய நேரம்)