xxxvii
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
எதுவும் அளிக்கப்படவில்லை. ஐந்தாம் உலகத்
தமிழ் மாநாடு 1981-ல் மதுரையில் நடைபெற்றது.
மாநாட்டில் உரையாற்றிய பாவாணர் 16.01.1981-ல்
மறைந்தார். அவர் விட்டுச் சென்ற
செ.சொ.பி.அகரமுதலிப் பணி தொடர்ந்து
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நான்கு
மடலங்கள் வெளிவந்துள்ளன. எஞ்சியவை இனி
வரவேண்டும்.
விதை; விதையிலிருந்து முளை தோன்றுகிறது; அம்
முனையினின்று வேர் தோன்றி நிலத்தில்
காலூன்றுகின்றது; வேர் ஆணிவேராக உறுதி
பெறுகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும்,
பக்க வேரிலிருந்து கல்லிவேர்களும் தோன்றி
மரஞ் செழித்து வாழ வகைசெய்கின்றன.
நிலத்துக்கு மேல் அடியாகவும், அதனின்று கிளை,
கொப்பு, வளார், இலை தோன்றி யாவருக்கும்
புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்குப்
புலப்படுவதில்லை.
சொன்னிலையும்
அப்படியே. சொற்களின் வேர் சொல்லாய்
வறிஞர்க்கு மட்டுமே புலப்படும்.
பாவாணர், பெரும்பான்மையான சொற்கள்
கட்டடியினின்றே பிறந்தன என்பார்.
ஆகாரச்சுட்டு, ஈகாரச்சுட்டு, ஊகாரச்சுட்டு
என்று முறைப்படி நின்றாலும் ஊகாரச்
சுட்டடிப் பிறந்த சொற்களே மிகுதியாதலான்
தலைதடுமாறலாக ஊகாரச் சுட்டடி, ஆகாரச்
சுட்டடி, ஈகாரச்சுட்டடி என்று வேர்ச்சொற்
கட்டுரைகளில் தலைப்பமைத்தார்.
குறில் நெடிலாயிற்று என்பது பலர் கருத்து.
நெடிலே குறிலாயிற்று என்பது பாவாணர்
கருத்து. இதற்குப் பிற திராவிட மொழிகள்
வலுவூட்டுகின்றன.
"உல் என்னும் முதலடி, சொன்முதன் மெய்கள்
ஆறொடு கூடிக் குரல், சுல், துல், நுல், புல்,
முல் என்னும் வழியடிகளைத் தோற்றுவிக்கும்"
(வட. வர. முன்னுரை)
உ - உல்
உ - முளை
உல் - ஆணிவேர்
குல் - சுல் - துல் - நுல் - புல் - முல்
என்பன பக்கவேர். அவற்றினின்று கிளைப்பன
சல்லிவேர்.
சொன்மூலம் வேர் (root), அடி (stem),
முதனிலை (theme) என மூவகைப்படும். வேரும்
முதல்வேர் (ஆணிவேர்), வழிவேர் (பக்கவேர்),
சார்புவேர் (சல்லிவேர்) என முத்திறப்படும்.
முதல் வேருக்கு மூலம் முளையாகும். முளைக்கு
மூலம் வித்தே. அடி என்பது சுவையுங்
கொப்புங் கிளையும் போத்துங் குச்சுமாகப்
பிரியும். இவையெல்லாம் தமிழ் போன்ற
இயன்மொழியிலேயே தெளிவாகக் காணப்பெறும்"(
வட. வர. பகுதி 2, ப.117).