Primary tabs
xxxvi
நான்காம் உலகத் தமிழ்க் கழக மாநாடு
சென்னையில் பெரியார் திடலில்
பதிப்பாசிரியர் அ. நக்கீரன் தலைமையில்
நடைபெற்றது.
தமிழ்ச்சொற்கள் ஞாலமுழுதும் பரவிக்
கிடக்கின்றன; பன்னாட்டு மொழிகளிலும்
விரவிக் கிடக்கின்றன என்பதனைப் பாவாணர்தாம்
தம் நுண்மாண் நுழைபுலத்தால் கண்டுபிடித்து
நிறுவினார். கால்டுவெல் எழுதிய ‘திராவிட
மொழி களின் ஒப்பிலக்கணம்‘ இதற்குத் துணை
செய்தது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்
பணியாற்றியபோது வங்கமொழி அறிஞர்
சுனித்குமார் சட்டர்சியால் ஏற்பட்ட
சிக்கலால் அண்ணாலை பல்கலைக் கழகத்தை விட்டு
வெளியேறினார்.
தமிழக அரசு இவரைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 1968-ல் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவர் புறக்கணிக்கப்பட்டார். புதையலைத் தேடிக் கண்டுபிடிப்பது போலவும், எண்ணெய் ஊற்றுகளை நாடிக் கண்டுபிடிப்பது போலவும் அறிஞர்களைத் தேடிக் கண்டு பிடித்து அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலை என்று போற்றப்படுகிறதோ அன்றுதான் நாடு உயரும்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்டம்