தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library


1
பதிப்புரை

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
          என்றும்,

பொய்யாமொழிப்புலவரான வான்புகழ் கொண்ட வள்ளுவர் கூறுகின்றார். அவர்  வாழ்க்கை   ஒரு திறந்த புத்தகம்.அதனை அவரது வாழ்க்கை வரலாறு உலகிற்கு உரைக்கின்றது.

அவர் வாழ்க்கையில் எந்த     ஒளிவும் மறைவும் இல்லை. தான் வாழ்ந்த  வாழ்க்கையை, உள்ளது உள்ளபடி உரைப்பதன் மூலம், உலக மக்களுக்கு    வழிகாட்ட    விரும்பியே அவர் தனது சுய சரிதையை எழுதினார்.

உள்ளத்தில் தூய்மை ( உண்மை ), செயலில் தூய்மை (மெய்மை), பேச்சில் தூய்மை (வாய்மை) பெற்று வாழ்ந்தால் தான் காந்தியடிகளால், ‘எனது வாழ்க்கையே      நான் கூறும் செய்தி’ என்று கூற முடிந்தது.

அண்ணலை   நமக்கெல்லாம்    அறிமுகப்படுத்தும்  வகையில்

தமிழகத்தின் தவப்பயனாய்த் தோன்றிய மகாகவி பாரதியார்,

“வாழ்க நீ! எம்மான், இந்த
  வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
  விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
  பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
  மஹாத்மா நீ வாழ்க! வாழ்க”
     என்கின்றார்.

நம்மை வாழ்விக்க வந்த   வித்தகர் தனது வாழ்க்கை வரலாறு மூலம்
இன்றும் நமக்கு  வழிகாட்டிக்  கொண்டிருக்கின்றார். நாம்  வாழ்கின்ற
இன்றையச்   சமுதாயத்தில்   தோன்றுகின்ற அரசியல்,  பொருளாதார,
சமுதாய, சமயச்சிக்கல்கள்   பெரும்பாலான  மக்களை மூச்சுத்திணறச்
செய்கின்றன. வாழ்க்கையில்     நம்பிக்கையிழந்து   பலர்  சோர்ந்து
விடுகின்றனர்.    இறைவனின் மீது   அசையா  நம்பிக்கை கொண்டு, சோதனைகளைக்    கண்டு   அஞ்சாமல்        செயல்படுபவர்கள்
வாழ்க்கையை ஓர் அரும்பெரும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:28:46(இந்திய நேரம்)