தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library


2

சாதனையாக   மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு     காந்தியடிகளின்
வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.

முன்பு எப்பொழுதும் இருந்ததைவிட  இப்பொழுது மகாத்மாவின்
வாழ்க்கையை    அறிந்து   கொள்ளும்   ஆர்வம்      மக்களிடம்
மிகுந்திருக்கின்றது.    ஆங்கிலத்தில்    வெளிவந்த  “காந்தி” என்ற
திரைப்படம் உலக மக்களைத் தட்டி எழுப்பியிருக்கின்றது. “இப்படியும்
ஒருவர்     வாழ்ந்தாரா?” என்ற கேள்வி எங்கும் எதிரொலிக்கின்றது.
அகிம்சை, சத்தியம்  என்ற  அடிப்படையில்  கட்டப்பெற்ற  கோபுரம்
மகாத்மாவின் வாழ்க்கை. அதனைத்    திரும்பத் திரும்பப் படிக்கின்ற
பொழுது நமது வாழ்க்கையில் தெளிவு பிறக்கும்.

காந்தியடிகள் மறைந்து 45 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அவர்
கனவு கண்ட வகையில் பாரத நாடு இன்னும் உருவாகவில்லை.அதற்குப்
பாடுபட எண்ணுகின்றவர்கள் அனைவரும் அண்ணலின் வாழ்க்கையை
அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதன் உள்ளடக்கம்தான் நமக்கு
வழிகாட்டும் ஒளிவிளக்கு.

அண்ணல் காந்தியடிகள் குஜராத்தி மொழியில் எழுதி,  ஆங்கில
வடிவம் பெற்று, தமிழாக்கமாக வருகின்ற இந்நூல் இதுவரை பதினொரு
பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. மொத்தம்  1,40,000   பிரதிகள் தமிழக
மக்களின் கைகளில்   தவழ்ந்திருக்கின்றன.   தொடர்ந்து இந்நூலுக்கு
தேவை இருப்பதாலும், இன்றும் என்றும் இந்நூல்   மக்கள் வாழ்விற்கு
ஆதார    சுருதியாக   விளங்கக் கூடிய நூல்      என்பதாலும்,இது
இப்பொழுது பன்னிரெண்டாம் பதிப்பாக நவஜீவன்  காரியாலயத்தாரால்
அண்ணலின் 125வது ஜெயந்தியையொட்டி மிகக் குறைவான விலையில் வெளிவருகின்றது.      அவர்களுக்கு     எங்களது      நன்றியை
உரித்தாக்குகின்றோம்.தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவரும்.   மக்கள்
இவற்றை வாங்கிப் படித்து, வாழ்க்கையில் ஒளிபெற வேண்டுகின்றோம்.

 
"டாக்டர் மா.பா.குருசாமி

மதுரை-20
1-5-’94

தலைவர்
காந்திய இலக்கியச் சங்கம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:28:56(இந்திய நேரம்)