Primary tabs
இவைபற்றி எண்ணும்போது
ஆச்சரியத்திலும்
அச்சத்திலும்
அமிழ்ந்துவிடுகிறேன்;ஒரு கணம் பிரமித்தும்
போய்விடுகிறேன்.ஆனால்,
கடவுள்
என்றால் சத்தியம்
மாத்திரமே எனக்
கருதி நான்
வழிபடுகிறேன்.அவருடைய தரிசனம் எனக்கு
இன்னும் கிட்டவில்லை.
ஆயினும், அவரைத் தேடிக்கொண்டே
இருக்கிறேன். இம் முயற்சியில்
வெற்றி பெறுவதற்காக, எனக்கு
இனியதான எதையுமே
தத்தஞ்
செய்துவிடத் தயாராயிருக்கிறேன். என் உயிரையே
இதற்காகத் தியாகம்
செய்துவிட வேண்டியிருந்தாலும், அதைக்
கொடுக்கவும் நான் தயாராக
இருப்பேன் என்றே
நம்புகிறேன். ஆனால், இந்தச்
சுத்த சத்திய
சொரூபியை நான் அடையும்
வரையில், எனக்குத் தெரிந்ததாகவுள்ள
சாதாரண சத்தியத்தையே நான்
பற்றுக் கோடாகக்
கொண்டாக
வேண்டும். இதற்கு மத்தியில் இந்தச்
சத்தியமே எனக்கு வழிகாட்டும்
ஒளியாகவும், பாதுகாக்கும் கேடயமாகவும்,
மார்புக்
கவசமாகவும்
இருந்தாக வேண்டும். இந்தச்
சத்திய வழி,
நேரானதாகவும்,
குறுகலானதாகவும், கத்தி முனையைப்போல்
கூர்மையானதாகவும்
இருந்தபோதிலும்,இதுவே எனக்கு
மிகச் சீக்கிரத்தில் செல்லக்கூடிய,
மிக எளிதான வழியாக இருந்து
வந்திருக்கிறது.இவ்வழியிலிருந்து
பிறழாமல் நான் கண்டிப்பாக நடந்து
வந்திருப்பதால், ஹிமாலயம்
போன்ற என்
பெரிய
தவறுகளெல்லாம் கூட
எனக்கு
அற்பமானவையாகத் தோன்றுகின்றன. ஏனெனில், இவ்வழியே
என்னைத் துன்பங்களிலிருந்து
காத்து வருகின்றது. இதில்
என்
உள்ளொளிக்கு ஏற்ப நான் முன்னேறிச்
சென்றிருக்கிறேன். என்
முற்போக்கில் சுத்த சத்தியமான கடவுளின்
மங்கலான தோற்றங்களை
நான் அடிக்கடி காண்கிறேன்.
மெய்ப்பொருள் அவர் ஒருவரே;
மற்றவை யாவும் பொய்யே
என்ற திடநம்பிக்கை நாளுக்கு நாள்
எனக்கு வளர்ந்து கொண்டும்
வருகிறது. என்னுள் இந்த உறுதி எவ்விதம்
வளர்ந்திருக்கிறது என்பதை
விருப்பமுள்ளோர் உணரட்டும்; அவர்களால் முடிந்தால்
சோதனைகளில்
பங்குகொண்டு எனது
திடநம்பிக்கையிலும்
பங்கு கொள்ளட்டும்.
எனக்குச் சாத்தியமானது, ஒரு சிறு
குழந்தைக்கும் சாத்தியமானதாகவே
இருக்கும் என்ற மற்றொரு நம்பிக்கையும்
என்னுள் வளர்ந்து வருகிறது.
இவ்விதம் நான் கூறுவதற்குத் தக்க
காரணங்களும்
இருக்கின்றன.
சத்தியத்தை அடைவதற்கான சாதனங்கள் எப்படிக்
கஷ்டமானவையோ,
அப்படி
எளிமையானவை
ஆகவும் இருக்கின்றன. இறுமாப்பைக்
கொண்ட ஒருவனுக்கு அவை முற்றும்