தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Index Page-ஐந்தாம் பதிப்பின் பதிப்புரைமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ
முன்னாள் இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை - 600 113

 

ஐந்தாம் பதிப்பின் பதிப்புரை

உண்மையான வரலாற்று ஆசிரியர்கள் விருப்பு, வெறுப்பு முதலிய
உணர்வுகளைக் கடந்து ஆய்வு நெறிநின்று உண்மையை அறிந்து உரைப்பர்.
பேராசிரியர் கே.கே. பிள்ளை அவர்கள் இந்த வரலாற்று அறிஞர்களுக்கான
வரைவிலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்.

பேராசிரியர் கே. கே. பிள்ளை அவர்கள் எழுதிய  A Social History
of Tamils, Natrinai in its Historical Setting, South India and Ceylo
n,
Studies in the History of India with special  reference to Tamil
Nadu
போன்றன சிறப்பு மிக்க வரலாற்று நூல்களாகும்.

இந்திய வரலாற்றை எழுதும் வரலாற்று ஆசிரியர்கள் உண்மையில்
வடபுலத்தில் இருந்து இந்திய வரலாற்றை எழுதுவதற்கு மாறாகத்
தென்புலத்தில் உள்ள குமரிமுனையில் இருந்து வரலாற்றை எழுதவேண்டும்
என்பார் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள். இக்கருத்தில்
பேராசிரியர் கே.கே.பிள்ளை அவர்களும் உடன்படுகிறார்.

இந்திய வரலாறு எழுதிய வரலாற்றுப் பேராசிரியர் ஆர்.ஜி.பந்தர்க்கார்
தமிழக வரலாற்றை எழுதாமல் புறக்கணித்தார் என்று பேராசிரியர்
கே.கே.பிள்ளை கூறுகிறார். அவர் மட்டுமன்று, இந்திய வரலாற்றை எழுதிய
ஆசிரியர்கள் பலர் தமிழக வரலாற்றைப் பற்றி எழுதவில்லை என்று
குறிப்பிடுகிறார். கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் வடபுலத்து வரலாறு
எழுதுவதற்குரிய தேவையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று அவர்கள்
கூறுவதைப் பேராசிரியர் கே.கே.பிள்ளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்திய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும் கி.பி.7ஆம் நூற்றாண்டுக்கு
முன்னரும் பின்னரும் தமிழகத்தைப் பற்றி எழுதுவதற்குரிய அனைத்து
ஆதாரங்களும் கிடைக்கின்றன. எனவே அவர்கள் தமிழக வரலாற்றைப்
பற்றித் திட்டமிட்டு எழுதாது விடுத்தனர் என்றும் அவ்வாறு விடுத்தமைக்கு
அவர்கள்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:07:16(இந்திய நேரம்)