தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Index Page



கூறும் காரணங்கள் ஏற்புடையனவல்ல என்றும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வரலாற்று ஆசிரியர்களைக் கடிந்து எழுதும் நெஞ்சுறுதியும்
நேர்மைத்திறமும் மிக்கவர் கே.கே.பிள்ளை. அவர் எழுதிய ‘தமிழக வரலாறு
மக்களும் பண்பாடும்’ என்ற நூலினை நிறுவனம் தற்போது மறுபதிப்புச்
செய்கிறது.

பேராசிரியர் கே.கே.பிள்ளை அவர்கள் இந்நூலைத் தமிழ்
இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், அகழாய்வுகள்,
வெளிநாட்டார் குறிப்புகள், நாணயங்கள் முதலியவற்றை அடிப்படையாகக்
கொண்டு எழுதியுள்ளார்.

அறிஞர்கள் தமிழக வரலாற்றைச் சங்க காலம், களப்பிரர் காலம்,
பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், நாயக்கர் காலம்,
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம், எனத் தனித்தனியாகப் பிரித்து ஆய்வு
நூல்களை எழுதியுள்ளார்கள். ஆனால் கே.கே. பிள்ளை அவர்கள் தமிழக
வரலாற்றை ஒருசேர முழுவதும் ஆய்வு செய்து இந்நூலைப் படைத்துள்ளார்.
எனவே இந்நூல் தனிச் சிறப்புடையது.

பேராசிரியர் கே.கே.பிள்ளை அவர்கள் ‘தமிழக வரலாறு: அடிப்படை
ஆதாரங்கள்’ என்பதில் தொடங்கி ‘20ஆம் நூற்றாண்டுத் தமிழகம்’ வரை 20
தலைப்புகளில் இந்நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் 23 ஒளிப்பட விளக்க
அட்டவணைகளும் 7 நாட்டுப்பட விளக்க அட்டவணைகளும் இடம்
பெற்றுள்ளன. இந்நூலாசிரியரின் வரலாற்றுப் பெரும்புலமையைப் பின்வரும்
சான்றுகள்வழி அறியலாம்.

1.வரலாற்று நூல் எழுதுவதற்கு அடிப்படை ஆதாரங்களில் ஒன்று
கல்வெட்டுகள். இக்கல்வெட்டுகள் தமிழகத்தில் 25 ஆயிரத்திற்குமேல்
கிடைத்துள்ளன. ஆயின் மிகவும் குறைந்த அளவினவே அச்சிடப்பட்டு
வெளிவந்துள்ளன. இன்னும் வெளிவராத தமிழ்க் கல்வெட்டுகள்
அதிகமாக உள்ளன. (பக்.7;13)

2.குடுமியான்மலைப் பாறையில் இசைக்கலை பற்றிய கட்டுரை
பொறிக்கப் பெற்றுள்ளது. (ப.7)

3.சீனாவில் உள்ள சுவான்சௌ என்ற ஊரில் உள்ள கோயிலில்
கஜேந்திர மோட்சம், உரலில் பிணைக்கப்பட்ட கண்ணன் சிற்பங்கள்
ஆகியன காணப்படுகின்றன. (ப.8)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:07:27(இந்திய நேரம்)