தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Index Page



4. முதலாம் இராசராசன், முதலாம் குலோத்துங்கன் ஆகிய
சோழ மன்னர்களின் தூதுவர்கள் சீன நாட்டுக்குச் சென்றிருந்த
செய்திகளைச் சீன நாட்டின் ‘சங்’ வரலாறுகளில் காணலாம்.
சீனப்பயணி ‘சா.ஜு .குவா’ (கி.பி. 1225) என்பவருடைய குறிப்புகள்
இவற்றை உறுதிப்படுத்துகின்றன. (ப.9)

5. அரேபிய எழுத்தாளர்கள் இபுனே ஹாக்கல், ஈஸ்டாக்கி
என்பவர்கள் அரபு நாடுகளோடு தமிழகம் கொண்டிருந்த வணிகத்
தொடர்புகளைத் தம் நூல்களில் எழுதியுள்ளனர். (ப.9)

6. சீனப்பயணி ஹியூன்சாங் (கி.பி.641-42) வெனீஸ் பயணி
மார்க்கோ போலோ (கி.பி.1293) முதலியோர் தமிழகத்தைப் பற்றி
எழுதிய குறிப்புகள் வியப்பை அளிக்கின்றன. (ப.8,9)

7. சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர் தமிழகத்தை ஆண்டார்கள்.
ஏறக்குறைய 300 ஆண்டுகள் அவர்களுடைய ஆளுகையில் தமிழகம்
இருண்டு கிடந்தது. அயலவரின், அரசியல், சமயம், மொழி
முதலியவற்றின் ஆதிக்கங்களால் தமிழகம் பல மாறுதல்களுக்கு
உட்பட்டது. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குரிய வேள்விக்குடிச்
செப்பேடுகள் களப்பிரர் ஆட்சி குறித்த செய்திகளை நமக்குக்
கூறுகின்றன. களப்பிரர் களப்ப குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும்
கன்னட நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் வரலாற்று
ஆசிரியர்கள் கருதுகின்றனர். (ப.5) அவர்கள் ஆட்சிக் காலத்தில்
புத்த சமயமும் சமண சமயமும் செல்வாக்குப் பெற்றன. பிராகிருதம்,
பாலி முதலிய மொழிகள் ஏற்றம் பெற்றன. மதுரையில் சமண
முனிவர் வச்சிரநந்தி தமிழ்ச்சங்கம் ஒன்றைத் தோற்றுவித்தார். சமண
சமய நூல்களை வெளியிட்டார். சோழ நாட்டில் அச்சுதவிக்கந்தன்
என்ற பௌத்த மன்னன் பௌத்த விகாரத்தைக் கட்டினான். புத்த
சமய நூல்களைத் தமிழில் வெளியிட்டான். (ப.5)

8. வரலாற்று ஆசிரியர்கள் சுட்டுகின்ற வலங்கை, இடங்கை
முதலிய சமூகங்களின் தோற்றத்தையும், அச்சமூகங்களின்
போராட்டங்களையும் சென்னைத் தெருமுனைகளில்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:07:39(இந்திய நேரம்)