தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்பக்கம்-ஆசிரியர் முன்னுரை


ஆசிரியர் முன்னுரை

1947-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த அனைவருமே, நம் நாடு விடுதலை
பெற்ற பிறகு பிறந்தவர்களே. தங்கள் தாய், தந்தையரைப்போல் அடிமை நாட்டிலே
பிறக்காமல், சுதந்திர நாட்டில், சுதந்திர மக்களாய்ப் பிறந்தவர்கள் என்ற பெருமை
அவர்களுக்கு உண்டு.

ஆயினும், “விடுதலை வாங்கித் தந்த காந்தித் தாத்தாவை நேரில் பார்க்கவில்லையே!
அவர் வாழ்ந்த காலத்தில் வாழக் கொடுத்து வைக்கவில்லையே!’’ என்ற ஏக்கம்
அவர்களுக்கு இருக்கிறது.

மகாத்மாவை நேரில் பார்க்காத போனாலும், அவர் வாழ்ந்த காலத்தில் வாழாத
போனாலும், ‘அவர் பிறந்த மண்ணிலே நாமும் பிறந்தோம்’ என்ற பெருமை இந்திய மக்கள்
அனைவருக்குமே உண்டு. ஆனால், அத்தகைய பெருமை பேசுவதோடு மட்டும்
நின்றுவிட்டால், என்ன பயன்?

மகாத்மா காந்தி நம் எல்லோரையும் போலவே பிறந்தார்; வளர்ந்தார்; சிறுவயதில்
சில தவறுகளும் செய்தார். ஆயினும், செய்த தவறுகளை உணர்ந்து பெரிதும் வருந்தினார்;
மனம் திருந்தினார்; படிப் படியாக உயர்ந்தார்; உலகம் போற்றும் உத்தமராகத் திகழ்ந்தார்.
 

     உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்-தெய்வம்
          உண்மை யென்று தான்அறிதல் வேணும்.
     வயிர முடைய நெஞ்சு வேணும்-இது
          வாழும் முறைமையடி பாப்பா.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-10-2019 12:00:28(இந்திய நேரம்)