Primary tabs
		என்று வாழும் வழியைப் பாப்பாவுக்குக் கூறினார் பாரதியார். இந்த வழியிலே 
					வாழ்ந்து
					காட்டியவர் மகாத்மா காந்தி. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தினார்: 
					கடவுளே
					உண்மை, உண்மையே கடவுள் என்று ஓயாது கூறிவந்தார்; அநீதிகளை அறவழியில்
					
					அஞ்சாமல் எதிர்த்து வெற்றி கண்டார்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையைக் குழந்தைகள் நன்கு அறிந்து 
					கொள்ளவேண்டும்,
					அவர் காட்டிய வழியிலே செல்லும் ஆசையை அவர்கள் உள்ளத்திலே ஊட்டி 
					வளர்க்க
					வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் காந்தியின் வழ்க்கை வரலாற்றைக் 
					குழந்தைகளுக்காக
					எழுதியிருக் கிறார்கள். நானும் என் பங்கை இந்தப் புத்தகத்தின் மூலம் 
					ஓரளவு நிறைவேற்ற
					முயன்றிருக்கிறேன்.
 
காந்திஜி வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, பதினான்கு ஆண்டுக்கு 
					முன்பு
					‘முதல் பேச்சு’ என்ற தலைப்பில், ‘தமிழ்நாடு’ இதழில் எழுதினேன். அப்போது 
					‘கரும்பு’
					என்ற சிறுவர் இதழின் ஆசிரியராயிருந்த திரு.பூவண்ணன், காந்தியின் 
					வாழ்க்கையில் 
					நடந்த சுவையான நிகழ்ச்சிகளையெல்லாம் அதேபோல் பாடல்களாக எழுதித் 
					தருமாறு 
					கேட்டுக்கொண்டார். அவ்வாறே, சிலகாலம் நான் தொடர்ந்து ‘கரும்பு’ 
					இதழில் 
					எழுதிவந்தேன். காந்திஜி தென் ஆப்பிரிக்கா போவதற்கு முன்புவரை நடந்த
					
					நிகழ்ச்சிகளைத்தான் என்னால எழுத முடிந்தது.
 
1957ல் ‘கல்கி’ இதழில் காந்திஜியின் வாழக்கையைச் சுருக்கமாக 
					எழுதித் 
					தரவேண்டுமென்றார். ‘கல்கி’ அதிபர் திரு. டி. சதாசிவம் 
					அவர்கள். அதற்கிணங்கி நான்
					எழுதிய 104 பாடல்களைத் தொடர்ந்து இரு இதழ்களில் சிறப்பாகப் பல 
					படங்களுடன்
					வெளியிட்டார்கள்.
 
‘கரும்பு’, ‘கல்கி’ இரண்டிலும் வெளிவந்த பாடல்களுடன், மேலும் பல 
					பாடல்களை
					எழுதி இந்த நூலைத் தயாரித்தேன்.