Primary tabs
பண்டைத் தமிழக வரலாறு:
களப்பிரர் - துளுநாடு
“களப்பிரரின் இருண்டகாலம் இந்நூலினால் ‘விடியற்காலம்’ ஆகிறது. மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானால் களப்பிரர் வரலாற்றில் பகற்காலத்தைக் காணக் கூடும்” என்று மயிலை சீனி. வேங்கடசாமி இந்நூலின் முகவுரையில் எழுதியுள்ளார். தமிழக வரலாற்றில் ‘இருண்டகாலம்’ என்று கூறப்பட்ட காலம் குறித்து முதன்முதலில் கூடுதலான தரவுகளை வெளிக் கொண்டு வந்தவர் இவரே. வேள்விக்குடிச் செப்பேடுகள் மூலம் அறியப்பட்ட புதிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார்.
களப்பிரர் ஆட்சியின் கீழிருந்த நாடுகள் எவையெவை என்பதை இந்நூல் வழி அறிகிறோம். களப்பிரர் எனும் சொல்லின் பொருள் விளக்கத்தையும் அறிய முடிகிறது. களப்பிரர்களை எவ்வகையில் அடையாளப்படுத்துவது? எங்கிருந்தவர்கள்? எப்படி ஆட்சியை அமைத்தார்கள்? ஆகிய விவரங்களை இந்நூல் வழி அறிகிறோம்.
யாப்பருங்கல விருத்தியுரை, தனிப்பாடற்திரட்டு, புலவர் புராணம் ஆகியவற்றில் காணப்படும் தகவல்கள், களப்பிரர் குறித்து அறிய உதவுவதை இந்நூல் சுட்டுகிறது. இரேணாட்டுச் சோழர் எனும்