தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரச மரபினர் களப்பிரர் ஆட்சியின் கீழ் இருந்தமை குறித்து இந்நூலில் விரிவான தகவல்களைப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். களப்பிரர்கள் காலத்தில் இலங்கையில் ஆட்சி புரிந்தவர்கள் குறித்தும் இந்நூல் மூலம் அறிகிறோம்.

களப்பிரர்கள் காலத்தில் இருக்குவேள் அரசர்கள் கொடும் பாளூர் பகுதியில் ஆட்சி புரிந்தனர். இவர்களும் களப்பிரர்களின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டே இருந்ததை அறிய முடிகிறது. களப்பிரர்கள் காலத்தில் சமண, பௌத்த சமயங்கள் செல்வாக்குடன் செயல்பட்டதாக மயிலை சீனி. குறித்துள்ளார். பல்வேறு சமண, பௌத்த சமய அறிஞர்கள் செயல்பட்டது தொடர்பான விரிவான விவரங்களைப் பதிவு செய்துள்ளார். வட்டெழுத்து இவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்திருப்பதை அறிகிறோம். மிகுதியான கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் காலத்தில்தான் வெளிவந்ததை அறிகிறோம்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் துளுநாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தென் கன்னட நாட்டுப் பகுதியே துளுநாடு. இந்நாடு பற்றிய தகவல்களை முதன் முதல் இந்நூல் வழி அறிகிறோம். குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட நிலப்பகுதி இது. துளு நாட்டின் எல்லை, ஆட்சி செய்த மன்னர்கள், துளு நாட்டில் ஏற்பட்ட போர்கள் ஆகியவை தொடர்பான தகவல்களை இந்நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார். துளுநாட்டில் நன்னர்கள் ஆட்சி புரிந்தமை தொடர்பான தகவல்களை இந்நூல் வழி அறிகிறோம்.

பண்டைத் தமிழ்ச் சமூக வரலாறு குறித்த விரிவான புரிதலை தருவதில் இவ்விரு நூல்களுக்கும் குறிப்பிடத் தக்க இடமுண்டு. சங்க இலக்கியங்கள் விரிவாக வாசிக்கப்பட்ட பிறகு, பண்டைத் தமிழ்ச் சமூக வரலாறு குறித்து அறியும் வாய்ப்பு உருவானது. தொல்பொருள் துறை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 03:01:35(இந்திய நேரம்)