Primary tabs


ணவெந் தேரே"
இது தூது விடும் தலைமகன் கூறியது.
"நெடுங்கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய ஆயின முன்னே இனியே
ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும்
தண்ணிய ஆயின சுரத்திடை ஆறே." (ஐங்குறு - 322)
இஃது இடைச்சுரத்துக் கூறியது. (48)
49. உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது ஆகுந் திணையுணர் வகையே.
இஃது, உவம வகையான் ஐந்திணைக்கும் உரியதோர் இயல்பு
உணர்த்துதல் நுதலிற்று.
உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - உள்ளுறைக்கண் வரும்
உவமமும் ஒழிந்த உவமமும் என இருவகையாலும், திணை உணர்வகை
தள்ளாது ஆகும் - திணை உணரும் வகை தப்பாதாகும். [ஏகாரம்
ஈற்றசை.]
உதாரணம் முன்னர்க் காட்டுதும். (49)
50. உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம்எனக்
கொள்ளும் என்ப குறிஅறிந் தோரே.
இஃது, உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று,
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை - உள்ளுறையாவது
கருப்பொருட்டெய்வம் ஒழிந்த பொருளை, நிலம் என கொள்ளும்
என்ப குறி அறிந்தோர் - இடமாகக் கொண்டுவரும் என்று சொல்லுவர்
இலக்கணம் அறிந்தோர்.
குறி - இலக்கணம்
51. உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்.
இஃது, உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உள்ளுறுத்து பொருள் இதனோடு ஒத்து
முடிக என -
(உள்ளுறுத்தப்பட்ட கருப்பொருளை) உள்ளுறுத்துக் கருதிய பொருள்
இதனோடு ஒத்து முடிக என, உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை
உவமம் - உள்ளுறுத்துக் கூறுவதே உள்ளுறை உவமம்.
எனவே, உவமையாற் கொள்ளும் வினை பயன் மெய் உருவன்றிப்
பொருளுவமையாற் கொள்ளப்படுவது.
உதாரணம்
"வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து
உண்டாடுந் தன்முகத்தே செவ்வி உடையதோர்
வண்தா மரைபிரிந்த வண்டு" (தண்டியலங்காரம்); ஒட்டணி
இது வண்டோரனையர் மாந்தர்எனக் கூறுதலான் உவமிக்கப்படும்
பொருள் புலப்படாமையின் உள்ளுறையுவம மாயிற்று. இதனுட் காவியும்
தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று. (51)
52. ஏனை உவமம் தானுணர் வகைத்தே.
இஃது, ஏனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
ஏனை உவமம் தான் உணர் வகைத்து - உள்ளுறை யொழிந்த
உவமம் தான் உணரும் வகையான் வரும்.
தான் உணரும் வகையாவது, வண்ணத்தானாதல் வடிவானாதல்
பயனானாதல் தொழிலானாதல் உவமிக்கப்படும் பொருளொடு எடுத்துக்
கூறுதல். [ஏகாரம் ஈற்றசை]
அது வருமாறு உவமவியலுட் கூறப்படும்.
இதனால் திணை உணருமாறு;
"வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழில்
முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறிநீ செய்தனை யென்ப அலரே
குரவ நீள்சினை உறையும்
பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே." (ஐங்குறு. 369)
இஃது ஊடற் பொருண்மைத்தேனும், வேனிற்காலத்து நிகழும்
குயிற்குரலை உவமித்தலிற் பாலைத்திணையாயிற்று. குரவம் - குராமரம்.
"உரைத்திசிற் றோழியது புரைத்தோ அன்றே
துருக்கங் கமழும் மென்தோள்
துறப்ப என்றி இறீஇயர்என் உயிரே." (சிற்றட்டகம்)
இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சியாயிற்று. (52)
53. காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை யெய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.
மேல் நடுவணைந்திணைக்குரிய பொருண்மையெல்லாம் கூறினார்.
இது கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
காமம் சாலா இளமையோள்வயின் - காமம் அமையாத இளையாள்
மாட்டு, ஏமம் சாலா இடும்பை எய்தி - ஏமம் அமையாத இடும்பை
எய்தி, நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான் - புகழ்தலும்
பழித்தலுமாகிய இரு திறத்தால், தன்னொடும் அவளொடும் தருக்கிய
புணர்த்து - தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்த்து, சொல் எதிர்
பெறான் சொல்லி இன்புறல் - சொல் எதிர் பெறானாய்த் தானே
சொல்லி இன்புறுதல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு
-
பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு.
'பொருந்தித்தோன்றும்' என்றதனால் அகத்தொடு பொருந்துதல்
கொள்க. என்னை? 'காமஞ்சாலா' என்றதனால் தலைமைக்குக் குற்றம்
வராதாயிற்று. 'புல்லித்தோன்றும்' என்றதனால், புல்லாமற்றோன்றும்
கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதா