Primary tabs


வது - காமஞ்சான்ற தலைமகள் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. அது
களவியலுள் கூறப்படுகின்றது ['என்று' என்பது எண்ணிடைச்சொல்.
ஏகாரம் ஈற்றசை.]
காமம் சாலா இளமையோள்வயின் கூறியதற்குச் செய்யுள்
"ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்
கொழுநிழல் ஞாழல் முதிரிணர் கொண்டு
கழும முடித்துக் கண்கூடு கூழை
சுவல்மிசைத் தாதொடு தாழ அகல்மதி
தீங்கதிர் விட்டது போலமுக னமர்ந்து
ஈங்கே வருவாள் இவள்யார்கொல் ஆங்கேஓர்
வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார்
உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால்
வேண்டுருவம் கொண்டதோர் கூற்றம்கொல் ஆண்டார்
கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற்
பல்கலைச் சில்பூங் கலிங்கத்தள் ஈங்கிதோர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்;
இவளைச் சொல்லாடிக் காண்பென் தகைத்து;
நல்லாய் கேள்,
ஆய்தூவி அனமென அணிமயிற் பெடையெனத்
தூதுணம் புறவெனத் துதைந்தநின் எழில்நலம்
மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ?
நுணங்கமைத் திரள்என நுண்இழை யணையென
முழங்குநீர்ப் புணையென அமைந்தநின் தடமென்றோள்
வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க்கு
அணங்காகு மென்பதை அறிதியோ அறியாயோ?
முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப்
பெயல்துளி முகிழெனப் பெருத்தநின் இளமுலை
மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டார்
உயிர்வாங்கு மென்பதை உணர்தியோ வுணராயோ ?
என ஆங்கு,
பேதுற்றாய் போலப் பிறரெவ்வம் நீயறியாய்
யாதொன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேளினி
நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமருந் தவறிலர்
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறையறைந் தல்லது செல்லற்க என்னா
இறையே தவறுடை யான். " (கலித்.குறிஞ்சி-20)
(53)
54. ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.
இது பெருந்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
ஏறிய மடல் திறம் -ஏறிய மடற்றிறமும், இளமை தீர்திறம் - இளமை
தீர்திறமும், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் - தேறுதலொழிந்த
காமத்து மிகுதிறமும், மிக்க காமத்து மிடலொடு தொகைஇ - மிக்க
காமத்து மாறாய திறனொடு கூட்டி, செப்பிய நான்கும் பெருந்திணைக்
குறிப்பு - சொல்லப்பட்ட நான்கு திறமும் பெருந்திணைக் கருத்து.
கைக்கிளை புணராது நிகழும் என்றமையால், இது புணர்ந்தபின்
நிகழும் என்று கொள்க. ஏறிய மடற்றிறம் தலைமகற்கே உரித்து. அது
வருமாறு; -
"எழின்மருப் பெழில்வேழ மிகுதரு கடாத்தால்
தொழின்மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங்கு
அறிவுநம் அறிவாய்ந்த அடக்கமும் நாணொடு
வறிதாகப் பிறரென்னை நகுபவும் நகுபுடன்
மின்னவிர் நுடக்கமுங் களவும்போல் மெய்காட்டி
என்னெஞ்சம் என்னொடு நில்லாமை நனிவௌவித்
தன்னலங் கரந்தாளைத் தலைப்படுமா றெவன்கொலோ
மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணிப்பூளை ஆவிரை யெருக்கொடு பிணித்தியாத்து
மல்லலூர் மறுகின்கண் இவட்பாடு மிஃதொத்தன்
எல்லீருங் கேட்டீமின் என்று;
படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை
நல்கியாள் நல்கி யவை;
பொறையென் வரைத்தன்றிப் பூநுதல் ஈத்த
நிறைஅழி காமநோய் நீந்தி அறையுற்ற
உப்பியல் பாவை உறையுற் றதுபோல
உக்கு விடும்என் உயிர்;
பூளைபொலமலர் ஆவிரை வேய்வென்ற
தோளாள் எமக்கீத்த பூ ;
உரித்தென் வரைத்தன்றி ஒள்ளிழை தந்த
பரிசழி பைதல்நோய் மூழ்கி எரிபரந்த
நெய்யுண் மெழுகின் நிலையாது பைபயத்
தேயும் அளித்தென் னுயிர் ;
இளையாரும் ஏதி லவரும் உளையயான்
உற்ற துசாவுந் துணை ;
என்றியான் பாடக் கேட்டு
அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின்
துன்பத்தில் துணையாய மடல்இனி இவட்பெற
இன்பத்துள் இடம்படலென் றிரங்கினள் அன்புற்று
அடங்கருந் தோற்றத்து அருந்