Primary tabs


உருவுகரந்து
தொறுவாய்ப் பட்ட தெரியல்ஊன் செத்து
பருந்துகொண் டுகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே.
(புறம்.271)
அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையும் - நொச்சியின் புறத்தாகிய
உழிஞையான் வீழ்ந்த புதுமையும். [ 'மற்று' என்பது
அசை. 'ஆன்'
என்பது இடைச்சொல்.]
உதாரணம்
"கோடுயர் வெற்பில் நிலங்கண் டிரைகருதுந்
தேடுகொள் புள்ளின் தொகையொப்பக் - கூடார்
முரணகத்துப் பாற முழவுத்தோள் மள்ளர்
அரணகத்துப் பாய்ந்திழந்தார் ஆர்த்து."
(புறப். உழிஞை.20)
நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் - கிடங்கின்
உளதாய போரின்
கண்ணே வீழ்ந்த பாசியும்.
உதாரணம்
"நாவாயும் தோணியும் மேல்கொண்டு நண்ணாதார்
ஓவார் விலங்கி உடலவும் - பூவார்
அகழி பரந்தொழுகும் அங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் வீழ்ந்தார் பலர்."
(புறப். உழிஞை.17)
அஃது அன்று ஊர்ச்செரு வீழ்ந்த அதன் மறனும் - அஃது
ஒழிய ஊர்ச்செருவின்கண் வீழ்ந்த பாசிமறனும். ['மற்று' என்பது அசை.]
உதாரணம்
"பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும்
ஏயினார் ஏய இகல்மறவர் - ஆயினார்
ஒன்றி யவரற ஊர்ப்புறத்துத் தார்தாங்கி
வென்றி அமரர் விருந்து."
(புறப். நொச்சி.2)
மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர்பக்கமும் - மதின்மேற்கோடற்குப்
பரந்த மதிலோர் பக்கமும்.
உதாரணம்
"அகத்தன வார்கழல் நோன்தாள்
அரணின்
புறத்தன போரெழில்திண்தோள் - உறத்தழீஇத்
தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட
வாட்குரிசில் வானுலகி னான்."
(புறப். நொச்சி.7)
இகல் மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் - தம்முடன் இகலி
மதில்மேல்
நின்றானை அட்டு அவன் முடிக்கலங் கொண்ட மண்ணு
மங்கலமும்.
உதாரணம்
"எங்கண் மலர எயிற்குமரி கூடிய
மங்கல நாள்யாம் மகிழ்தூங்கக் - கொங்கலர்தார்ச்
செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே
மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி."
(புறப். உழிஞை.28)
வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற - வென்ற வாளின் மண்ணு
மங்கலமும் பொருந்த.
உதாரணம்
"தீர்த்தநீர்பூவொடு பெய்து திசைவிளங்கக்
கூர்த்தவாள் மண்ணிக் கொடித்தேரான் - பேர்த்தும்
இடியார் பணைதுவைப்ப இம்மதிலுள் வேட்டான்
புடையார் அடையப் புகழ்."
(புறப். உழிஞை.27)
தொகைநிலை - அம் மதிலழித்தமையான் மற்றுள்ள
மதில்கள்
வரைப்பில் மாறுபட்ட வேந்தரும் முரண் அவிந்தபடி யடைதல்.
உதாரணம்
"வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்தவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை யாகுமதி எம்மென் றருளிக்
கலம்பிறங்கு வைப்பிற் கடற்றிரை யாத்தநின்
தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின்
செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயிற்
கோள்வல் முதலைய குண்டுகண் அகழி
வானுற ஓங்கிய வளைந்துசெய் புரிசை
ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி
நின்னில் தந்த மன்னெயில் அல்லது
முன்னும் பின்னுநின் முன்னோர் ஓம்பிய
எயில்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறிதாறு செல்மதி சினங்கெழு குரிசில்
எழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக்
குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணின்
தேம்பாய் கடத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
மேம்படு வெல்கொடி நுடங்கத்
தாங்கல் ஆகா ஆங்குநின் களிறே."
(பதிற்றுப். 52)
என்னும் துறையொடு தொகைஇ வகைநால்மூன்று என மொழிப -
என்னும் துறையோடு கூடிய உழிஞைவகை பன்னிரண்டு என்று கூறுவர்.
70. தும்பை தானே நெய்தலது புறனே
மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை அழிக்குஞ் சிறப்பிற் றென்ப
இது, தும்பைத்திணை யாமாறுணர்த்துதல் நுதலிற்று.
தும்பை நெய்தலது புறன் - தும்பை என்னும் திணை நெய்தல்
என்னும் அகத்திணைக்குப்
புறனாம், மைந்து பொருளாக வந்த
வேந்தனை சென்று தலையழிக்கும் சிறப்பிற்று
அது - வலி
பொருளாகப் போர்கருதி வந்த அரசன்கண்
சென்று அவனைத்
தலையழிக்கும் சிறப்பினையுடைத்து.
இதனானே "எதிரூன்றல் காஞ்சி" (பிங்க. அநுபோக. 1474)
என்பாரை மறுத்தவாறு அறிக.
அதற்கு இது புறனாயவாறு
என்னையெனின். இருபெருவேந்தரும் ஒருகளத்துப்
பொருதலின்,
அதற்கு இடம் காடும் மலையும்
கழனியும் ஆகாமையானும், களரும்
மணலும் பரந்த வெளி நிலத்துப் பொருதல் வேண்டுதலானும்,
அந்நிலம் கடல்சார்ந்த வழியல்லது இன்மையானும், நெய்தற்கு ஓதிய
எற்பாடு போர் தொழிற்கு
முடிவாதலானும் நெய்தற்குப்
புறனாயிற்று.['என்ப' அசை]
(12)
71. கணையும் வேலும் துணையுற
மொய்த்தலிற்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இருநிலந் தீண்டா அருநிலை வகையொடு
இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே.
இது, தும்பைத்திணையின் சிறப்பியல் உணர்த்துதல் நுதலிற்று.
இது மேலனபோல ஒருபாற்கு மிகுதலின்றி இருவகையார்க்கும்
ஒத்த இயல்பிற்றாம்;ஒருவர்மாட்டும் மிகுதல் இல்லை.