Primary tabs


கத்திற்
பாய வகையாற் பணிதம் பலவென்றாள்
ஆய நிலையம் அறிந்து."
(புறப்.பெருந்திணை. 19)
இது சூதுவென்றி. பிறவும் வந்தவழிக் காண்க.
எழுவகையான் தொகைநிலை
பெற்றது என்மனார் புலவர்-
ஏழ்வகையான் தொகைநிலை பெற்றதென்று கூறுவர் புலவர். [ஆங்கு என்பது அசை.]
(16)
75. கூதிர் வேனில் என்றிரு பாசறைக்
காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர்
வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்
ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்
பெரும்பகை தாங்கும் வேலி னானும்
அரும்பகை தாங்கும் ஆற்ற லானும்
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்
ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்துத்
தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும்
ஒல்லார் இடவயிற் புல்லிய பாங்கினும்
பகட்டி னானும் மாவி னானுந்
துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்
கடிமனை நீத்த பாலின் கண்ணும்
எட்டுவகை நுதலிய அவையகத் தானும்
கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும்
இடையில் வண்புகழ்க் கொடையி னானும்
பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும்
பொருளொடு புணர்ந்த பக்கத் தானும்
அருளொடு புணர்ந்த அகற்சி யானும்
காமம் நீத்த பாலி னானுமென்று
இருபாற் பட்ட ஒன்பதின் துறைத்தே.
இது, வாகைத்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
கூதிர்ப்பாசறை முதலாகச் சொல்லப்பட்ட பதினெட்டுத் துறையும்
வாகைத்துறையாம். எனவே, மேற் சொல்லப்பட்ட
ஏழ் வகையும் திணை யென்று கொள்க.
கூதிர் வேனில் என்று இரு பாசறை காதலின் ஒன்றி கண்ணிய
வகையும - கூதிர்ப்பாசறையும்
வேனிற்பாசறையும் என்று
சொல்லப்பட்ட இருவகைப் பாசறைகளையும் போரின்மீது கொண்ட
காதலாற் பொருந்திக் கருதிய போர்நிலை வகையும்.
இவை இரண்டும் ஒரு வகை. [இச் சூத்திரத்தில் வரும் இன்னும்
ஆனும் இடைச்சொற்கள்].
உதாரணம்
"கவலை மறுகின் கடுங்கண் மறவர்
உவலைசெய் கூறை ஒடுங்கத் - துவலைசெய்
கூதிர் நலியவும் உள்ளான் கொடித்தேரான்
மூதில் மடவாள் முயக்கு."
(புறப்.வாகை. 117)
பிறவும் அன்ன,
ஏரோர் களவழி அன்றி களவழி தேரோர் தோற்றிய வென்றி
ஏரோர் களவழி கூறுதலும் அன்றிப் போரோர் களவழி தேரோர்
தோற்றுவித்த வென்றியும்.
உதாரணம்
"இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழின் மருப்பின்
கருங்கை யானை கொண்மூ வாக
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மீன் ஆக வயங்குகடிப் பமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக
அரசுஅராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசுவளி யாக
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச் செறுவயின் தேர்ஏர் ஆக
விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
பாடுநர்க் கிருந்த பீடுடை யாள
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக்குரல் தடாரி யுருப்ப ஒற்றிப்
பாடி வந்திசின் பெரும பாடான்று
எழிலி தோயும் இமிழிசை அருவிப்
பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்து அன்ன
ஓடை நுதல ஒல்குதல் அறியாத்
துடிஅடிக் குழவிப் பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகைவெய் யோயே" (புறம், 369)
இஃது ஏரோர் களவழி.
"ஓஒ உவமை உறழ்வின்றி ஒத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலாய்
ஆவுகை காளாம்பி போன்ற புனல்நாடன்
மேவாரை அட்ட களத்து." (களவழி. 39)
இது போரோர் களவழி.
"நளிகடல் இருங்குட்டத்து
வளியுடைத்த கலம்போலக்
களிறுசென்று களன் அகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
ஒளிறிலைய எஃகேந்தி
அரசுபட அமருழக்கி
உரைசெல முரசுவௌவி
முடித்தலை அடுப்பாகப்
புனற்குருதி உலைக்கொளீஇத்
தொடித்தோள் துடுப்பில் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே
நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர்பெற்று
ஆற்றா ராயினும் ஆண்டுவாழ் வோரே." (புறம். 29)
இது கனவேள்வி.
தேரோர் வென்ற கோமான் தேர்முன் குரவையும் - தேரோரைப்
பொருது வென்ற அரசன் தேர்முன் ஆடுகுரவையும்.
உதாரணம்
"...................................
களிற்றுக்கோட் டன்ன வாலெயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள்நிணச் சுவையினன்
குடர்த்தலை மாலை சூடி உணத்தின
ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
வயங்குபல் மீனினும் வா