Primary tabs


"ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழூஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரோடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
என்நிலை யறிந்தனை யாயின் இந்நிலைத்
தொடுத்துங் கொள்ளா தமையலென் அடுக்கிய
பண் அமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே."
(புறம்.164)
இன்னும் இதனானே, பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னும்
குறிப்பும் கொள்க.
உதாரணம்
"நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்பாடு எருவை பசுந்தடி தடுப்பப்
பகைப்புல மரீஇ தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே."
(புறம்.64)
பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி
நடைவயின் தோன்றிய
இருவகை விடையும் - பரிசில் பெற்ற
பின்னரும் அவன் கொடுத்த
மிக்க வளனை ஏத்தி வழக்கின்கண்
தோன்றிய இருவகை. விடையும்
அவையாவன, தான் போதல் வேண்டும் எனக்
கூறுதலும் அரசன்
விடுப்பப் போதலும்.
வளன் ஏத்தியதற்குச் செய்யுள்
"தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாளோட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்றென்
அரிக்கூடு மாக்கிணை இரீய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்த அல்ல மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது மொழிதந் தோனே அதுகண்டு
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந் தாஅங்கு
அறாஅ வருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே."
(புறம்,378)
தான் பிரிதல் வேண்டிக் கூறியதற்குச் செய்யுள்
"ஊனும் ஊணு முனையின் இனிதெனப்
பாலிற் பெய்கவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத் தாற்றி இருந்தென மாகச்
சென்மோ பெருமஎம் விழவுடை நாட்டென
யாந்தன் னறியுநம் ஆகத் தான்பெரிது
அன்புடை மையின் எம்பிரி வஞ்சித்
துணரியது கொளா ஆகிப் பழமூழ்த்துப்
பயம்பகர்வு அறியா மயங்கரின் முதுபாழ்ப்
பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி
ஊனுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
விரல்விசை தவிர்க்கும் மரலையில் பாணியின்
இலம்பாடு அகற்றன் யாவது புலம்பொடு
தெருமரல் உயக்கமுந் தீர்க்குவெம் அதனால்
இருநிலங் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கிடைக் கோடிய பின்றைச்
சேயை யாயினும் இவணை யாயினும்
இதற்கொண்டு அறிவை வாழியோ கிணைவ
சிறுநனி, ஒருவழிப் படர்கென் றோனே எந்தை
ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
உறுவருஞ் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
இருங்கோள் ஈராப் பூட்கைக்
கரும்ப னூரன் காதல் மகனே."
(புறம்.381)
அரசன் விடைகொடுப்பப் போந்தவன் கூற்று
"நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே."
(புறம்.163)
'இருவகை விடையும்' என்றதனால், பரிசில்
பெற்றவழிக் கூறுதலும்
பெயர்ந்தவழிக் கூறுதலும் ஆம்.
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின்
நிமித்தமும்
காலம் கண்ணிய ஓம்படை - அச்சமும் உவகையும் ஒழிவு
இன்றி
நாளானும் புள்ளானும் பிற நிமித்தத்தானும்
காலத்தைக் குறித்த
ஓம்படையும்.
அச்சமாவது, தீமை வரும் என்று அஞ்சுதல். உவகையாவது நன்மை
வரும்
என்று மகிழ்தல், நாளாவது நன்னாள் தீநாள். புள்ளாவன,ஆந்தை
முதலியன, பிற நிமித்தமாவன, அல