Primary tabs


ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக்
குன்றகத் ததுவே கொளுமிளைச் சீறூர்
சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத்து வேபிறர்
விடுத்தற் காகாது பிணித்தஎன் நெஞ்சே." (நற்றிணை - 95)
இன்னும் இயற்கைப்
புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைந்
தெய்தல் வேண்டிக் கூறினவுங் கொள்க.
"முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே அணங்குதற்கு
யான்தன் அறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொல் தானே
பெருமுது செல்வன் ஒருமட மகளே".
(குறுந்-337)
[இது பாங்கன் நின்னை அணங்காக்கியாள்
எவ்விடத்தவள்
எவ்வியலினள் என்று வினாய் அறிந்தது.]
இவ்வாறு கேட்ட பாங்கன் அவ்வழிச் சென்று கண்டதற்குச் செய்யுள்:
"இரவி னானும் இன்துயில் அறியாது
அரவுறு துயரம் எய்துப தொண்டித்
தண்ணறு நெய்த னாறும்
பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே."
(ஐங்.173)
எனவரும்.
இச் சூத்திரத்துள் கூற்று வரையறுத்துணர்த்தாமை
பாங்கற் கூற்றும்
அடங்கற்குப் போலும்.
பெட்ட வாயில்பெற் றிரவு வலியுறுப்பினும் என்பது மேற்சொல்லிய
வாற்றான்
உடம்பட்ட பாங்கனால் தலைமகளைப் பெற்றுப் பின்னும்
வரைந்தெய்த
லாற்றாது களவிற் புணர்ச்சி வேண்டித் தோழியை இரந்து
பின்நின்று
கூட்டக் கூடுவன் என்னும் உள்ளத்தனாய் அவ்விரத்தலை
வலியுறுத்தினும் என்றவாறு.
வலியுறுத்தலாவது, தான் வழிமொழிந்தது யாது
தான் அவ்வாறு
செய்குவல் என்றமை.
பெட்ட வாயிலால் தலைமகளைக் கண்டு கூறியதற்குச் செய்யுள்:
"கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக் கிடுகுமிடை யிழவல் கண்டாய்". (சிலப்.கானல்.17)
இன்னும் பெட்ட வாயில் பெற்று என்பதற்கு இரட்டுற மொழிதல்
என்பதனால்
தலைமகள் தான் விரும்பப்பட்ட தோழியாகி எமக்கு
வாயில் நேர்வாள் இவள் எனப்பெற்றுப்
பின்னிரந்து குறையுற
நினைப்பினும் என்றுமாம். அதற்குச் செய்யுள்:
"தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண்
துளிதலைத் தலைஇய தளிர்அன் னோளே". (குறுந்.222)
இரவு வலியுறுத்தற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க.
"கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பிரிவி லாட்டி
அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம்
அருந்துயர் அவலந் தீர்க்கும்
மருந்து பிழிதில்லையான் உற்ற நோய்க்கே." (நற்றிணை.140)
என்னும் பாட்டும் ஆம்.
இத்துணையும் பாங்கற்கூட்டம்.
ஊரும்... பகுதியும் என்பது -
ஊராயினும் பேராயினும்
கெடுதியாயினும் பிறவாயினும் நீர்மையினால் தன்குறிப்புத் தோன்றக்
கூறித் தலைமகன் தோழியைக் குறையுறும் பகுதியும் உண்டு என்றவாறு.
அவற்றுள் ஊர்வினாயதற்குச் செய்யுள்:
"அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணிக்
கன்றுகால் யாத்த மன்றப் பலவின்
வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழங்
குழவிச் சேதா மாந்தி அயலது
வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும்
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச்
சொல்லவுஞ் சொல்லீர் ஆயிற் கல்லெனக்
கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த
செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக்
கொய்புனங் காவலும் நுமதோ
கோடேந் தல்குல் நீள்தோ ளீரே".
(நற்றிணை - 213)
பெயர் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு
கொள்க, கெடுதி
வினாயதற்குச் செய்யுள்:
"நறைபரந்த சாந்தம் அறிஎறிந்து நாளால்
உறையெதிர்ந்து வித்திஊழ் ஏனல் - பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு."
(திணைமாலை.1)
"இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரில்
தீதும் உண்டோ மாத ரீரே."
என்றது பிறவாறு வினாயது. பிறவுமன்ன.
தோழி குறை ... இடனுமா ருண்டே என்பது - தோழி குறையைத்
தலைமகளைச் சார்த்தி மெய்யுறக் கூறுதலும்,
அமையா திரப்பினும்
மற்றைய வழியும், சொல்லவட் சார்த்தலிற் புல்லிய
வகையினும்,
அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி
மருங்கிற்கேடும் பீடும்
கூறுதலின் நீக்கலினாகிய நிலைமையும் நோக்கி மடல்மா கூறுதலும்
உண்டு தலைமகன்கண் என்றவாறு.
தலைமகன்கண் என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. உம்மையாற்
பிறகூறுதலு
முண்டென்றவாறு. புணர்ச்சி நிமித்தமாகத்
தலைமகன்
இரத்தலுங் குறையுறுதலும்
மடலேறுவல் எனக் கூறுதலும்
பெறுமென்றவாறு. ஈண்டு, குறையவட் சார்த்தி
மெய்யுறக் கூறல்
என்பது தோழி கூற்றுள் அருமையி னகற்சி யென்று ஓதப்பட்டது.
தண்டாதிரத்தலாவது - தலைமகன் பலகாலுஞ்
சென்று nஇரத்தல்.
மற்றைய வழி என்பது - பின்வரவென்றல் முதலாயின.
சொல்லவட்
சார்த்தலிற் புல்லியவகை என்பது - முன்னுறு புணர்ச்சி
முறைநிறுத்
துணர்த்தலென ஓதப்பட்டது. அறிந்தோவயர்ப் பென்பது
- பேதைமை
யூட்டல் என ஓதப்பட்டது.
கேடு கூறுதலாவது - உலகுரைத்
தொழிப்பினும் என ஓதப்பட்டது. பீடுகூறுதலாவது- பெருமையிற்
பெயர்ப்பினும் என ஓதப்பட்டது. நீக்கலினாகிய நிலைமை என்பது -
அஞ்சி அச்சுறுத்த லென
ஓதப்பட்டது. இவையெல்லாந் தோழி
கூற்றினுட் காணப்படும்.
தோழியைக் குறையுறும் பகுதி வருமாறு:-
"தோளுங் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோற்
குட்டுவன் தொண்டி அன்ன
எற்கண்டு மயங்கிநீ நல்காக் காலே".
(ஐங்குறு-178)
இனி மடலேறுவல் என்பதற்குச் செய்யுள்:
"மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப