தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   110


 

இன்னுந் தலைமகள் நலம் பாராட்டிய வழிக் கூறவும் பெறும்.

"அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியர்எம் கணவனை
யான் ஆகியர்நின் நெஞ்சுநேர் பவளே."       (குறுந்.49)

என வரும்.

கொடுமை   ஒழுக்கத்துத்   தோழிக்குரியவை   வருவது  சிறப்பின்
திரியாமைக்  காய்தலும்  உவத்தலும்  பெட்டலும்  ஆவயின்  வரூஉம்
பல்வேறு  நிலையினும் என்பது  - தலைவி  கொடுமையொழுக்  கத்துத்
தோழிக்குக் கூறுதற் குரியவை குற்றமற்ற சிறப்பினையுடைய கற்பின்கண்
திரியாது  தலைவனைக்  காய்தலும்   உவத்தலும்   நீக்கி   நிறுத்தலும்
பேணிக்கோடலும்  அவ்விடத்து   வரும்   பலவாய்  வேறுபட்டு  வரு
நிலையினும் தலைவி கூற்று நிகழும் என்றவாறு.

தோழிக்குரியவை  என்றதனால் தோழிக்குக் கூறத்தகா தனவும் உள
என்று கொள்க.

உதாரணம்

"நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக்
கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புல்லிய தெவனோ அன்பிலங் கடையே."      (குறுந்.93)

இது காய்தல் பற்றி வந்தது.

"நாமவர் திருந்தெயி றுண்ணவும் அவர்நம
தேந்துமுலை யாகத்துச் சாந்துகண் படுப்பவுங்
கண்டுசுடு பரத்தையின் வந்தோற் கண்டும்
ஊடுதல் பெருந்திரு உறுகெனப்
பீடுபெறல் அருமையின் முயங்கி யேனே."

எனவும்,

"காணுங்கால் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை."                 (குறள்.1286)

எனவும் இவை உவத்தல் பற்றி வந்தன.

"அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்துந்
தடந்தாள் நாரை யிருக்கும் எக்கர்த்
தண்ணந் துறைவற் றொடுத்து நன்னலங் கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டக்
கொடுத்தவை தாஎனக் கூறலின்
இன்னா தோநம் மன்னுயிர் இழவே."

இது பிரித்தல் பற்றி வந்தது.

"நீரார் செறுவில் நெய்தலொடு நீடிய
நேரிதழ் ஆம்பல் நிரையிதழ் கொண்மார்
சீரார் சேயிழை ஒலிப்ப ஓடும்
ஓரைமகளிர் ஓதை வெரீஇ யெழுந்து
ஆர லார்கை அஞ்சிறைத் தொழுதி
உயர்ந்த பொங்கர் உயர்மரம் ஏறி
அமர்க்கண் மகளிர் அலப்பிய அந்நோய்
தமர்க்குரைப் பனபோற் பல்குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலிநல் லூரன்
புதுவோர்ப் புணர்தல் வெய்ய னாயின்
வதுவை நாளால் வைகலும் அஃதியான்
நோவேன் தோழி நோவாய் நீயென
எற்பார்த் துறுவோய் கேளினித் தெற்றென;
எல்லினை வருதி எவன்குறித் தனையெனச்
சொல்லா திருப்பேன் ஆயின் ஒல்லென
விரிஉளைக் கலிமான் தேரொடு வந்த
விருந்தெதிர் கோடலின் மறப்பல் என்றும்;
வாடிய பூவொடு வாரல்எம் மனையென
ஊடி யிருப்பே னாயின் நீடா
அச்சா றாகஉணரிய வருபவன்
பொய்ச்சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;
பகலாண் டல்கினை பரத்த என்றியான்
இகலி இருப்பே னாயின் தான்தன்
முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வற் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும்
ஆங்க;
விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும்
அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கவிந் தொழியும்என் புலவி தாங்கா
தவ்வவ் விடத்தான் அவையவை காணப்
பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவேன் தோழி கடன்நமக் கெனவே."       (கலித்.75)

இது பெட்பின்கண் வந்தது.

"நகையா கின்றே தோழி நெருநல்
மணிகண் டன்ன துணிகயந் துளங்க
இரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய
காஞ்சி நுண்டா தீர்ம்புறத் துறைப்ப
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண்துறை யூரன் தண்டார் அகலம்
வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி அழிபட்
டெம்மனை புகுதந் தோனே அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்
றிம்மனை யன்றஃ தும்மனை என்ற
என்னுந் தன்னும் நோக்கி
மம்மர் நெஞ்சினன் தொழுதுநின் றதுவே."     (அகம்.56)

இது மேற்கூறியவாற்றா னன்றிப் பிறவாற்றான் வந்தது.

"ஒலிபுனல் ஊரனை ஒருதலை யாக
வலிநமக் காவது வலியென் றொழியப்
பந்தர் மாட்டிய பரூஉச்சுடர் விளக்கத்துக்
கந்த முனித்தலைத் தும்பி ஆர்ப்பக்
காலை கொட்டிய தவர்தோற் சிறுபறை
மாலை யாமத்து மதிதர விடாது
பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வனைக்
காண்டலுங் காணான்தன் கடிமனை யானே."

என வரும்.

வாயிலின் வரூஉம்  வகையொடு  தொகைஇக்  கிழவோன்  செப்பல்
கிழவதென்ப   என்பது  -  வாயில்கள்  மாட்டு  வரூஉங்  கூற்றுவகை
யுளப்படத் தலைவி கூற்று நிகழும் என்றவாறு.

வாயில்களாவார்:-  பார்ப்பார்,  பாங்கன்,  தோழி, செவிலி, பாணன், விறலி,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:59:54(இந்திய நேரம்)