தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   116


 

டியார் நலந்தேம்ப ஓடியெறிந் தவர்வயின்
மால்தீர்க்கும் அவன் மார்பென் றெழுந்தசொல் நோவேமோ
முகைவாய்த்த முலைபாயக் குழைந்தநின் றார்எள்ள
வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம்;

சேரியாற் சென்றுநீ சேர்ந்தவில் வினாயினன்
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ
ஒலி கொண்ட சும்மையான் மணமனை குறித்தெம்மில்
பொலிகெனப் புகுந்தநின் புலையனைக் கண்டயாம் ;
எனவாங்கு
நனவினான் வேறாகு வேளா முயக்கம்
மனைவரிற் பெற்றுவந்து மற்றெந்தோள் வாட
இனைய ரென உணர்ந்தா ரென்றேக்கற் றாங்குக்
கனவினா னெய்திய செல்வத் தனையதே
ஐய எமக்குநின் மார்பு."                    (கலித்.68)

இது மூவகையார்க்கும் பொது.

இல்லோர்   செய்வினை   யிகழ்ச்சிக்    கண்ணும்    என்பது  -
மனையகத்தோர்   செய்த   வினையை   யிகழ்ந்து   கூறுதற்கண்ணும்
என்றவாறு.

பன்மையால்  தலைமகனை  யிகழ்தலுந்   தலைமகளை  யிகழ்தலுங்
கொள்க.

உதாரணம்

"கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடியிற் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே."      (குறுந்.8)

என்றும்,

"நன்மரங் குழீஇய நனைமுதிர் சாடிப்
பன்னாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்கு மழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்
நறுவிரை தெளித்த நாறிணர் மாலைப்
பொறிவரி இனவண் டூதல் கழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
புனையிருங் கதுப்பின் நீகடுத் தோள்வயின்
அனையேன் ஆயின் அணங்குக என்என
மனையோன் தேற்று மகிழ்நன் ஆயின்
யார்கொல் வாழி தோழி நெருநல்
தார்பூண் களிற்றில் தலைப்புணை தழீஇ
வதுவை யீரணிப் பொலிந்த நம்மொடு
புதுவது வந்த காவிரிக்
கோடுதோய் மவிர்நிறை யாடி யோரே."       (அகம்.166)

என்றும் வரும். இவை தலைவனை இகழ்ந்தன.

"அளியர் தாமே மகிழ்நநின் பெண்டிர்
தாமவற் பிணித்தல் தேற்றார் நாமழச்
செய்தார் அகலம் வவ்வினர் இவரென
எம்பழி அறையுநர் போலத்
தம்பழி தூற்றும் பெரும்பே தையரே."

"எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்
பொரி அகைந் தன்ன பொங்குபல சிறுமீன்
வெறிகொள் பாசடை யுணீஇயர் பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபுவந் திருக்குந்
துறைகேழ் ஊரன் பெண்டுதன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப நாமது
செய்யா மாயின் உய்யா மையின்
செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவண்
உலமந்து வருகஞ் சென்மோ தோழி
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
வெளிறில கற்பின் மண்டமர் அடுதொறும்
களிறுபெறு வல்சிப் பாணன் எறியுந்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர்தன் வயிறே." (அகம்.106)

இவை பரத்தை கூற்று.

பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும் என்பது  -  பலவகைப்
புதல்வரைக் கண்டு மிகவும் உவந்து கூறியவழியு மென்றவாறு.

உதாரணம்

"நயந்தலை மாறுவார் மாறுக மாறாஅக்
கயந்தலை மின்னுங் கதிர்விடு முக்காழ்ப்
பயந்தஎங் கண்ணார யாங்காண நல்கித்
திகழொளி முத்தங் கரும்பாகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்பக்
கவழம் அறியாநின் கைபுனை வேழம்
புரிபுனை பூங்கயிற்றிற் பைபய வாங்கி
அரிபுனை புட்டிலி னாங்கணித் தீங்கே
வருகஎம் பாக மகன்;
கிளர்மணி யார்ப்பார்ப்பச் சாஅய்ச்சாஅய்ச் செல்லுந்
தளர்நடை காண்டல் இனிதுமற் றின்னாதே
உளமென்னா நுந்தைமாட் டெவ்வம் உழப்பார்
வளைநெகிழ் பியாங்காணுங் கால்;

ஐய, காமரு நோக்கினை அத்தத்தா என்னுநின்
தேமொழி கேட்டல் இனிதுமற் றின்னாதே
உய்வின்றி நுந்தை நலனுணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வநோய் யாம்காணுங் கால்;

ஐய, திங்கட் குழவி வருகென யான் நின்னை
அம்புலி காட்டல் இனிதுமற் றின்னாதே
நல்காது நுந்தை புறமாறப் பட்டவர்
அல்குல்வரி யாங்காணுங் கால்;

ஐயஎம், காதில் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும்
போதில் வறுங்கூந்தற் கொள்வதை நின்னையான்
ஏதிலார் கண்சாய நுந்தை வியன்மார்பில்
தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய
கோதை பரிபாடக் காண்கும்."               (கலித்.80)

என வரும்.

மறையின்  வந்த  மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய
பருவரற்  கண்ணும்   என்பது  -  களவின்   வருகின்ற  மனையோன்
செய்வினை பொறையின்றிப் பெருகிய துன்பத்தின் கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"வாளை வாளிற் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்குங்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ஆம்பல் உருவ நெறித்தழை
ஐதக லல்குல் அணிபெறத் தைஇ
விழவிற் செலீஇயர் வேண்டு மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையா மையோ அரிதே வரையின்
வரைபோல் யானை வாய்மொழி முடியன்
வரைவேய் புரையும் நற்றோள்
அளிய தோழி தொலையுந பலவே."      (நற்றிணை.390)

இது, பரத்தையராகி வந்த காமக்கிழத்தியர் கூற்று.

காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் றாய்போற்கழ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 12:01:01(இந்திய நேரம்)