Primary tabs


ணிபநீ செலக்கண்ட ஆற்றிடை அம்மரத்து
அணிசெல வாடிய அந்தளிர் தகைப்பன;
எனவாங்கு;
யாநிற் கூறவும் எமகொள்ளாய் ஆயினை
ஆனா திவள்போல் அருள்வந் தவைகாட்டி
மேல்நின்று மெய்கூறுங் கேளிர்போல் நீசெல்லுங்
கானந் தகைப்ப செலவு."
(கலித்.3)
என வரும்.
இனித் தலைமகட்குக் கூறியதற்குச் செய்யுள் ;
"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிறிதாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்."
(குறள்.1160)
என வரும்.
பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் தோழிக்குரிய வென்மனார்
புலவர் என்பது - மேற்சொல்லப்பட்ட
கிளவியன்றிப் பிற வாய்பாட்டாற்
பாகுபட
வந்த கிளவி யெல்லாந் தோழிக்குரிய என்றுரைப்பர் புலவர்
என்றவாறு.
வகைபடவந்த கிளவியாவன:- பிரிந்த தலைமகன் வருவனெனக்
கூறுதலும்,
பருவங்கண்டு கூறுதலும், வற்புறுத்தலும்,
நிமித்தங்கண்டு
கூறுதலும், வந்தான் எனக்
கூறுதலும், இந்நிகரனவும், மேற்சொல்லப்பட்ட
இடங்களிற்
கூற்று வேறுபாடாகி வருவனவுங் கொள்க,
அவற்றிற்
களவுக்குங் கற்பிற்கும் பொதுவாகி வருவன அகத்திணையியலுட்கொள்க.
கற்பிற்கே உரித்தாகி வருவன ஈண்டுக் கொள்க.
"ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை
ஏமாண் சிலையார்க் கினமா இரிந்தோடும்
தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு
வாய்மாண்ட பல்லி படும்."
(கைந்நிலை.18)
இது நிமித்தங் கண்டு கூறியது.
"வாளிலங் குண்கண் வைஎயிற் றோயே
ஞாலங் காவலர் வந்தனர்
காலை அன்ன மாலைமுந் துறத்தே."
இது தலைவன் வந்தமை கூறியது- பிறவும் அன்ன-
149. புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்
பல்வேறு புதல்வர்க் கண்டுநனி உவப்பினும்
மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்
காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையில்
தாய்போற் கழறித் தழீஇய மனைவியைக்
காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும்
இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து
பின்னை வந்த வாயிற் கண்ணும்
மனையோ ளொத்தலின் தன்னோர் அன்னோர்
மிகையெனக் குறித்த கொள்கைக் கண்ணும்
எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவும்
கண்ணிய காமக் கிழத்தியர் மேன.
என்-எனின் . காமக் கிழத்தியர் கூற்று நிகழும் இடம் உணர்த்திற்று.
புல்லுதன் மயக்கும் புலவி முதலாகச் சொல்லப்பட்ட இடத்தினும்
அந்நிகரன பிறிவிடத்தினும் குறிக்கப்பட்ட
கூற்றுக் காமக்கிழத்தியர்
மேலன என்றவாறு.
கூற்றென்பது அதிகாரத்தான் வந்தது.
காமக்கிழத்தியராவார் பின்முறை
ஆக்கிய கிழத்தியர். அவர்
மூவகைப்படுவர்; ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப்
பட்டாரும் என. ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையாளன்றிக் காமம்
பொருளாகப்
பின்னுந் தன் குலத்துள்ளாள். ஒருத்தியை வரைதல்.
இழிந்தாராவார்
- அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிககுலத்தினும்
வேளாண்
குலத்தினும் கொடுக்கப்பட்டாரும், அரசர்க்கு ஏனையிரண்டு
குலத்தினுங்
கொடுக்கப்பட்டாரும், வணிகர்க்கு வேளாண்குலத்திற்
கொடுக்கப்பட்டாரும், வரையப்பட்டார் -
செல்வராயினார் கணிகைக்
குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை
கொடுத்து வரைந்து கோடல். அவர்
கன்னியில்`
வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப் பட்டாரும் என
இருவகையர்.
அவ்விருவரும் உரிமை பூண்டமையாற்
காமக்
கிழத்தியர்பாற் பட்டனர். பரத்தையராவார் யாரேனின், அவர் ஆடலும்
பாடலும் வல்லராகி அழகு மிளமையுங் காட்டி இன்பழும் பொருளும்
வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார்.
இவருள்ளும் ஒருவரைப்பற்றி
மறுதலைப் பெண்டிரைச் சார்த்திக் கூறுவனவும்
காமக் கிழத்தியர்
கூற்றின் பாற்படும். இவற்றின் வேறுபாடு
அவரவர் கூற்றானறிக,
இச்சூத்திரத்திற் காமக்கிழத்தியென
ஓதாவது `கிழத்தியர்' என
ஓதுதலானும் பலவகையார் என்பது கொள்க.
புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் என்பது
புல்லுதலைக் கலக்கும்
புலவிமாட்டுங் காமக்கிழத்தியர் கூற்று நிகழும் என்றவாறு.
அஃதாவது முதிராத புலவிமாத்திரமாகிய
புணர்ச்சியையுடன் பட்ட
நெஞ்சத்தளாதல்.
உதாரணம்
"பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு
மதிமொழி யிடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவிசெறு வாக
முதுமொழி நீராப் புலனா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர;
ஊரன்மன் உரனல்லன் நமக்கென்ன உடன் வாளா
தோரூர்தொக் கிருந்தநின் பெண்டிருள் நேராகிக்
களையாநின் குறிவந்தெங் கதவஞ்சேர்ந் தசைத்தகை
வளையின்வாய் யிடன் மாலை மகளிரை நோவேமோ
கேளலன் நமக்கவன் குறுகன்மி னெனமற்றெம்
தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம்;
ஊ