தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   114


 

தீர்க்கவும்  அதன் வழி வாராத ஊடலுற்றோள்வயின் அவ்வூடலைத்
தீர்த்தல்  வேண்டிய  தலைவன்   பக்கத்தாளாகி   நின்று  தலைவனை
வெகுண்டு நின்றுண்டாக்கிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

"உப்பமைந் தற்றால் புலவி அது சிறிது
மிக்கற்றால் நீள விடல்."                  (குறள்.1302)

என வரும்.

அருமைக்    காலத்துப்   பெருமை    காட்டிய   எளிமைக்காலத்
திரக்கத்தானும்  என்பது   -   தாமரியராகக்   களவுகாலத்துத்   தமது
பெருமையைக்  காட்டிய   தாம்   எளியராகிய   கற்புக்காலத்து   இது
இரக்கத்தின்  கண்ணும்  கூற்று  நிகழும் என்றவாறு.

பெருமைகாட்டிய  விரக்கம்  எனக்  கூட்டுக.  இதனாற் சொல்லியது
வாளாதே  இரங்குதலன்றிப் பண்டு  இவ்வாறு   செய்தனை  இப்பொழு
திவ்வாறு   செய்யாநின்றனை   எனத்   தமதுயர்ச்சியுந்   தலைமகனது
நிலை    யின்மையுந்     தோற்ற     இரங்குதலாயிற்று.     இதுவும்
புலவிமாத்திரமன்றித்  தலைவ  னீங்கி யொழுகும்  ஒழுக்கம் மிக்கவழிக்
கூறுவதெனக் கொள்க.

உதாரணம்

"வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கு மென்றனிர்
ஐய வற்றால் அன்பின் பாலே."             (குறுந்.196)

என வரும்.

பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச்  சொல்லிய குறைவினை
யெதிரும்  என்பது -  பாணராயினுங்  கூத்தராயினும்  விறலியராயினும்
இத்தன்மையர் விரும்பிச் சொல்லிய குறையுறும்  வினைக்  கெதிராகவுங்
கூற்று நிகழும் என்றவாறு.

குறையுறும்  வினை  குறைவினையென  ஒட்டிற்று; அது  சொல்லிய
என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று.

உதாரணம்

"புலைமகன் ஆதலிற் பொய்ந்நின் வாய்மொழி
நில்லல் பாண செல்லினிப் பரியல்
பகல்எஞ் சேரிக் காணின்
அகல்வய லூரன் நாணவும் பெறுமே."

எனவும்.

"அணிநிறக் கெண்டை ஆடிடம் பார்த்து
மணிநிறச் சிறுசிரல் மயங்குநம் பொய்கை
விரைமல காற்றா லிருந்தினம் யாமென
முழவிமிழ் முன்றில் முகம்புணர் சேர்த்தி
எண்ணிக் கூறிய இயல்பினின் வழாஅது
பண்ணுக் கொளப் புகுவ கணித்தோ பாண
செவிநிறை உவகையேம் ஆக
இது நாணன்மைக் குரைத்துச் சென் றீமே."

எனவும் வரும்.

நீத்த  கிழவனை  நிகழுமாறு  படீஇயர் காத்த தன்வயிற் கண்நின்று
பெயர்ப்பினும் என்பது  -  தலைவியை  நீத்த  கிழவனை  அவளுடன்
நிகழுமாறு  படுத்தல் வேண்டி  அவனைப்  புறங்காத்த  தன்னிடத்துற்ற
தலைமகனைக் கண்ணோட்டமின்றிப் பெயர்த்தற்கண்ணும் கூற்று நிகழும்
என்றவாறு.

உதாரணம்

"மனையுறு கோழிக் குறுங்காற்பேடை
வேலிவெருகின மாலை யுற்றெனப்
புகுமிடன் அறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழியர் ஐயஎம் தெருவே."          (குறுந்.139)

என வரும்,

பிரியுங்காலை வெதிர்நின்று சாற்றிய   மரபுடை  எதிரும்  உளப்பட
என்பது  -  தலைவன்   சேயிடைப்   பிரியுங்   காலத்து  முன்னின்று
சொல்லிய மரபுடை மாறுபாடும் என்றவாறு.

எனவே  அகத்திணையியலுட் கூறப்பட்டது களவுகாலத்தை நோக்கிக்
கூறுதலான  அயலிதாகக் கூறப்பெறும்  என்பதூஉம்   இவ்வோத்தினுட்
செலவழுங்குவித்தல்  பார்ப்பார்க்  குரித்தாகக்  கூறுதலானுங் கற்பினுட்
பிரிவு மரபு  கெடாமற் கூறவேண்டும்  என்பதூஉங் கருத்து.  மரபினாற்
கூறுதலாவது    குற்றேவன்    முறைமையாற்    கூறுதல்.    பிரிவை
அகத்திணையியலுள் வைத்ததனான். ஆண்டுக் கூறிய கிளவி இருவகைக்
கைகோளிற்கும்    பெரும்பான்மை     யொக்கும்   எனக்   கொள்க.
உடன்போக்கும் ஒக்குமோ எனின், கற்பினுள் உடன்போக்கு உலகியலுட்
பெரும்பான்மை  யென்று கொள்க.  இக்கூற்றுத்   தலைமகன்  மாட்டுந்
தலைமகள் மாட்டுமாம்.

"அறன்இன்றி அயல்தூற்றும் அம்பலை நாணியும்
வறனீந்தி நீசெல்லும் நீளிடை நீனைப்பவும்
இறைநில்லா வளையோட இதழ் சோர்பு பனிமல்கப்
பொறைநில்லா நோயொடு புல்லென்ற நுதலிவன்
விறல்நல னிழப்பவும் வினைவேட்டாய் கேளினி;

உடையிவள் உயிர்வாழாள் நீநீப்பின் எனப்பல
இடைகொண்டியாம் இரப்பவும் எமகொள்ளா யாயினை
கடைஇய ஆற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை
அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன;

வல்லைநீ துறப்பாயேல் வகைவாடும் இவளென
ஒல்லாங்கியாம் உரைப்பவும் உணர்ந்தீயா யாயினை
செல்லுநீ ளாற்றிடைச் சேர்ந்தெழுந்த மரம்வாடப்
புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன;
பிணிபுநீ விடல் சூழிற் பிறழ்தரும் இவளெனப்
பணிபுலந் திறுப்பவும் பலசூழ்வா யாயினை
து

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 12:00:39(இந்திய நேரம்)