Primary tabs

என்ற இரண்டு சொல்லும் தன்னால் அறியப்படாத பொருட்கண்
வினாவாய்த் தோன்றும் என்றவாறு.
வரலாறு: நுந் நாடியது? இப் பண்டி யுள்ளது எவன்? என வரும்.
செறிய என்பது யாப்புறுத்தல். இஃது யாப்புறத்தோன்றும் என்ப, பிற
யாப்புறாமற் றோன்றுவனவும் உள என்பதாகும்.
வரலாறு: யாவன், யாவள், யாவர், யாது யாவை என்பன.
ஐந்து பாலும் அறியலுற்று வாரா : வினா மாத்திரத்திற்கு* வரும்.
(31)
32. அவற்றுள்
யாதென வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்
தெரிந்த கிளவி யாகலு முரித்தே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இறந்தது காத்தல் நுதலிற்று.
உரை:
அவற்றுள், யாது என்பது தன்னான் அறியப்பட்ட
பொருட்கண் ஐயப்பட்டதனைத் தெளிதற்குச் சொல்லவும் பெறும்
என்றவாறு.
வரலாறு: நம் எருத்தைந்தனுள் யாது கெட்டது ? என வரும்.
உம்மை எதிர்மறை.
மற்று, இதுவும் அறியாப் பொருளாதல் ஒக்கும் பிறவெனின், முன்
யாதும் உணராததன்கட் சொல்லினான் ; அது முற்சூத்திரத்தோடு
இதனிடை வேற்றுமை. முன்னர்ச் சூத்திரம், ‘எவன் யாது’ என்று
கூறற்பாலன், எற்றுக்கு, ‘யாது எவன்’ எனக் கூறினான் என்னின், ‘யாது’
என்பதனைப் பின்னரும் இங்குக் கொணர்ந்து ஆராய்தலின் என்க.
அவ்வாறு கூறாது குறிப்புக்கொண்டதனான், ‘நமருள் யாவர்
போயினார்?’ ‘அவற்றுள் எவ்வெருது கெட்டது? என்பன கொள்க. (32)
__________________
“வினாவு மாத்திரத்திற்கு வந்த சூத்திரம்--பிரதிபேதம்.
33. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகையி னும்மை வேண்டும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், வரையறைப் பொருட்கண்
சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று ; மரபுவழுக் காத்தது
எனினும் அமையும்.
உரை: இத்துணை என்று வரையறுக்கப்பட்ட சினைக் கிளவிக்கும்
முதற்கிளவிக்கும் வினைப்படுத்துச் சொல்லுமிடத்து இறுதி உம்மை
கொடுத்துச் சொல்லுக என்றவாறு.
வரலாறு : நம்பி கண்ணிரண்டும் நொந்தன ; நங்கை முலையி