Primary tabs

ரண்டும் வீங்கின என வரும்.
சினைக்கிளவி உம்மை கொடாவிடிற் பிற கண்ணும் முலையும்
உளவாவன செல்லுமாகலான், உம்மையன்றிக் கூறுதல் மரபன்று.
இனி, முதற்கிளவி வருமாறு : ‘தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்’
என வரும்.
‘இருதிணை மருங்கின் ஐம்பாலும் அறிய’--என்னாது, ‘இருதிணை
மருங்கின் ஐம்பால் அறிய’ (தொல். சொல். கிளவி. 10) என்று சூத்திரஞ்
செய்தானாலாசிரியனேனும், செய்யுட்கண் உம்மையன்றி வருதற்கு
உடம்பொடு புணர்த்தான் என்றலும் ஒன்று. இனிச் சூத்திரத்திற்
சினைமுதற் கூறிய முறையன்றிக் கூற்றினுள் உம்மையின்றி வருவனவும்
உள என்பதுபற்றி, உம்மையைத் தொகுத்துக் கூறினான் என்பாரும்
உளர். (33)
34. மன்னாப் பொருளு மன்ன வியற்றே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் மரபு வழுக்காத்தல்
நுதலிற்று.
உரை: மன்னாப் பொருள் என்பது -- இல்லாப் பொருள் என்ப ;
அதனையும் சொல்லுமிடத்து உம்மை கொடுத்துச் சொல்லுக என்றவாறு.
வரலாறு: ‘பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளும்
இல்லை’ என வரும்.
உம்மை பெறுத லொப்புமை நோக்கியே, முதற் சூத்திரத்தொடு
மாட்டெறிந்ததெனக்கொள்க. (34)
35. எப்பொரு ளாயினு மல்ல தில்லெனின்
அப்பொருளல்லாப் பிறிதுபொருள் கூறல்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், மறித்துச் சொற்பல்காமைத்
தொகுத்திறுக்கும் இலக்கணம் இஃதென்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
எவ்வகைப்பட்ட பொருளாயினும், தன்னுழையுள்ளதல்லதனை
இல்லை யெனலுறுமே யெனின், அவன் கூறிய பொருளல்லாத பிறிது
பொருள் கூறி, இல்லை என்க என்றவாறு.
தன்னுழை உள்ளதன் உண்மை கூறி, இல்லை என்க என்பது
கருத்து.
வரலாறு: ‘பயறுளவோ வணிகீர்?’
என்றால், ‘உழுந்தல்லதில்லை’
என்க, தன்னுழை யவை