Primary tabs

உளவாயின்.
இதன் கருத்து, அவன் வினாவப்பட்ட பொருட்கு இனமாய பிறிது
பொருளே கூறுக என்பது.
இச் சூத்திரம், ‘செப்பும் வினாவும்’ (தொல், சொல், கிளவி. 13)
என்பதனுள் அடங்காதாயிற்று, அவன் வினாவிற்குச்
செவ்வனிறையாகவன்றிப்
பிறிதுமொன்று கொணர்ந்து
இறுத்தமையின்.(35)
36. அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் ஓர் இறுத்தல்
வகைமை யுணர்த்துதல் நுதலிற்று; மேலதற்கு ஓர் புறனடையும் என்பது.
உரை:
அவன் வினாயின அப் பொருளையே சொல்லலுறுமேயெனிற்
சுட்டிக் கூறுக என்றவாறு.
வரலாறு: இவை யல்லது பயறில்லை, இப் பயறல்லது இல்லை என
வரும்.
37,
பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் ஒரு சொல்லுதல்
வகைமை யுணர்த்துதல் நுதலிற்று. மேலதற்கோர் புறனடை எனவுமாம்.
உரை:
பொருளொடு புணராது நின்ற சுட்டுப் பெயராமே யெனினும்,
அப் பொருட்கு இயைபுபட வருமேயெனின் அமையும் என்றவாறு.
வரலாறு: ‘இவை யல்லது பயறில்லை’ என்புழிப் ‘பயறு’ என்னுஞ்
சொல்லாற் பயன் உணரப்பட்டது; ‘அல்லது’ என்னுஞ் சொல்லே
எதிர்மறுத்து நின்றது. ‘இல்லை’ யென்னும் சொல்லான் இன்மை
உணரப்பட்டது.
இனி, இவை என்னும் சொல்பொருளின்றால், அஃது என் செய்யும்
என்றார்க்கு, அதுவும் பயற்றினையே சுட்டிற்றாகலான், அமைக என்பது
கருத்து.
இஃது, ஒரு பொருண்மேல் இருபெயர் வழுக்காத்தவாறு.
38,
இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற்
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய வென்மனார் புலவர்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் ஒரு பொருண்மேல்
இரு