Primary tabs

ருபெயர் வழுக்காத்தல் நுதலிற்று,
உரை:
இயற்பெயர் என்பன இரண்டு திணைக்கும் உரிய பெயர்;
சுட்டுப் பெயர் -- மூன்று சுட்டு முதலாக வரும் பெயர்; அவ்விரண்டும்
வினைக்கண் ஒருங்கு நடப்பதோர் காலந் தோன்றுமே யெனின்,
இயற்பெயர் முன் கூறிச் சுட்டுப் பெயரதனைப் பின் வைத்துக் கூறுக
என்றவாறு.
வரலாறு: ‘கொற்றன் வந்தான், அவற்குச் சோறு கொடுக்க’ என
வரும்.
மற்றுச், ‘சுட்டுப் பெயர்க் கிளவி முற்படக் கிளவார்’ எனவே,
இயற்பெயர்வழியே கிளப்ப என்பது முடிந்தது.
பின்னை, ‘இயற்பெயர் வழிய’ எனல் வேண்டா; அதனால்,
உயர்திணைப் பெயர்வழியும், அஃறிணைப் பெயர்வழியும் வைத்துக்
கூறுக அச் சுட்டுப் பெயர்களை என்றதாம்.
வரலாறு: ‘நம்பி வந்தான், அவற்குச் சோறிடுக’, ‘எருது வந்தது,
அதற்குப் புல்லுக் கொடுக்க’ என வரும்.
இனி, ‘வினைக்கியலுங் காலந் தோன்றின்’ என அமையும், ‘ஒருங்கு’
என்ற மிகையதனான், அகர, இகரச் சுட்டே கொள்க.
இனி, ‘வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் சுட்டே கிளக்க’
என்பதனான், பெயர்க்கு யாது முன் கூறினும் அமைக என்பதாம்.
வரலாறு: சாத்தன் அவன், அவன் சாத்தன் என வரும்.
இனி, ஒருவன், ‘இயற்பெயர்’ எனவே, உலகத்து இயன்று வரும்
பெயர் எல்லாம் அடங்கும் என்னும். (38)
39. முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இஃது எய்தியது விலக்குதல்
நுதலிற்று.
உரை: செய்யுளகத்தாமே யெனிற் சுட்டுப் பெயர் முன் சொல்லி,
இயற்பெயர் பின் வைத்துக் கூறினும் அமையும் என்றவாறு.
வரலாறு:
‘அவனணங்கு நோய்செய்தா னாயிழாய் வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந்
தன்னை யலர்கடப்பந் தாரணியி னென்னைகோல்
பின்னை யதன்கண் விளைவு’
என வரும். இதனுள், ‘அவன்’ என்பது சுட்டு,