Primary tabs

வாதே சொல்ல அமையும். மேற்சூத்திரத்தின் துணிபும் இதுவே.
வேறுபடு வினையும் இனமும் சார்பும் வேண்டாமை
உணர்புழியாயின் அவையின்றியும் அமையும் என்பது. ()
56. குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மரபு வழுக்காத்தல்
நுதலிற்று.
உரை: தான் ஒரு பொருளைச் சொல்லக்கருதுமேல், அதனை
இற்றென்று தெரித்துச் சொல்லுக என்றவாறு.
வரலாறு: உலற்றற் றிறமின்றிப் பயின்றார் ஒரு சான்றார் மயிர் நீட்டி
உலறிநின்றாரைக் கண்டு, ஒருவன், எம்பெருமான் உலறிநின்றீரால்
என்றக்கால், வாளாதே உலறினேன் என்னற்க, இது காரணத்தால்
உலறினேன் என்க ; இது தனக்கு உற்றதுரைத்தது. பிறவும் அன்ன.
இது செப்பு வழுவற்க என்று காத்தவாறு என்ப ஒரு திறத்தார்.
இனித் தெரித்துச் சொல்லாக்கால் வழுவேயாயினும் அமைக எனக்
காத்தவாறு.
இனி, ஒரு கருத்து : உலகினுள் ஒப்பமுடிந்தபொருளை ஒருவன்
ஒவ்வாமை சொல்லுமே எனின், இது காரணத்தின் ஒவ்வாமை நோக்கிச்
சொல்லினன் என்று தெரித்துச் சொல்லுக என்றவாறு.
‘பல்லோர்தோ டோய்ந்து வருதலாற் பூம்பொய்கை
நல்வய லூரநின் றார்புலாஅல் - புல்லெருக்க
மாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையாற்
காதற்றாய் நாறு மெமக்கு.’
என வரும். (56)
57.
குடிமை யாண்மை யிளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை யரசே மகவே குழவி
தன்மை திரிபெய ருறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலேன்
றாவறு மூன்று முளப்படத் தொகைஇ
அன்ன பிறவு மவற்றொடு சிவணி
முன்னத்தி னுணருங் கிளவி யெல்லாம்
உயர்திணை மருங்கி னிலையின வாயினும்
அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், திணை வழுக்காத்தல்
நுதலிற்று.
உரை: குடிமை யாண்மை தொடக்கத்