தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1177


ளிர்த்தது, மாபூத்தது, மாகாய்த்தது எனவரும். இவ்வினை மர மாவிற்
கல்லது ஏலாது. பிறவும் அன்ன. 

‘மாவும்  மருதும்  ஓங்கின’  என்பது,  இனத்தான்  மாமரம்  என
விளங்கும். 

‘மாவும்  மரையும் புலபடர்ந்தன’ என்றால், விலங்கு  மா  என்பது
அறியப்படும். 

இனிச்  சார்பினான்  அறியவருமாறு : விற்பற்றி நின்று, ‘கோல் தா’
என்றால்,    கணைக்கோலின்மேல்    நிற்கும்,    அதற்குச்    சார்பு
அதுவாகலான்.  குதிரைமேலிருந்து,  ‘கோல்  தா’ என்றால், மத்திகைக்
கோலாம் ஆகலானும், சுள்ளற்கோலாம் ஆகலானும் செல்லும்; அதற்குச்
சார்பு அதுவாகலான். பிறவும் அன்ன. (53) 

54. ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும். 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  அம்  மூன்று  வகையான்
உணர்ந்தவாறு   போலாது,  உணராமை  நிற்குமாறுடைத்து  இச்சொல்
என்பது உணர்த்துதல் நுதலிற்று. 

உரை:  ஒன்று  வினை  என்பது  --  பொது  வினை  ;  பொது
வினையாயிற் பகுதியுணராமற் றோன்றும் என்றவாறு. 

அது  வருமாறு:  ‘மா வீழ்ந்தது’ என்றவிடத்து, இன்ன மா என்பது
உணர்த்தல் ஆகாது : பொதுவாய் நிற்கும். () 

55. வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்.
 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,  வினை  வேறுபடாஅப்
பல்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை:  வினை  வேறுபடாஅப்  பல  பொருள்  ஒரு  சொல்லை
ஆராயுமிடத்து இன்னதென்று  அறியக் கிளந்தே சொல்லுக என்றவாறு. 

வரலாறு: ‘ஆன் கன்று நீருட்டுக’ என வரும். 

நினைதல் என்பது ஆராய்தல். 

ஆராயுமிடத்துக்   கிளந்து  கூறுக  எனவே,  ஆராய்ச்சி யில்லாத
இடத்தாயிற்   கிளவாதே   கூற   அமையும்   என்பதே   அமையும்.
ஆராய்ச்சியுடைய  நிலம் என்பது எருநிலம் ; யாதோ வெனின், ‘கன்று
நீருட்டுக’ என்றவிடத்து, ஆன் கன்றும், எருமைக் கன்றும், பூங்கன்றும்
எனப்  பலவும்  ஆங்கு  உளவாயின், அவன் சொன்ன கன்று  நிற்பப்,
பிறிதொரு கன்று நீரூட்டல் வழுவாம். அதனான், இன்னுழி இன்னகன்று
என்று கிளந்து சொல்லுக ; அல்லாக்கால், இன்ன கன்று என்று கிள
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:16:09(இந்திய நேரம்)