Primary tabs

கிய தொகையுமா ருளவே
யவ்வு முரிய வப்பா லான.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், தொகைச்சொல்லும்
பயனிலை ஏற்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
அறுவகைத்
தொகைச் சொல்லும் எழுவாய் வேற்றுமைப்
பயனிலைப்பாடும் பிழையாது வரும் என்றவாறு.
வரலாறு :
யானைக் கோடு உண்டு
யானைக் கோடு செல்க
யானைக் கோடு வீழ்ந்தது
யானைக் கோடு யாது
யானைக் கோடு வெளிது
யானைக் கோடு பத்து
எனவரும், பிறவுமன்ன.
இனி ஒரு கருத்து -- ‘பெயரினாகிய தொகையுமாருளவே’ என்பது,
பெயரும் பெயருந்தொக்க தொகையும் என்றவாறு, உம்மையான்
வினையும் பெயருந் தொக்க தொகையும் எழுவாய் வேற்றுமைப்
பயனிலைப்பாடு பிழையாது வரும் என்று கொள்க.
அது, ‘கொல் யானை’ என்பது. (6)
69.
எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
யவ்விய னிலையல் செவ்வி தென்ப.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இன்னும் எழுவாய்
வேற்றுமைக்காவதோர் திறமுணர்த்துதல் நுதலிற்று.
உரை :
எல்லாப் பெயரும் பயனிலைப்பட நிற்றற்றன்மையில்
திரியாமை அதற்குச் செவ்விது என்ப ; பிறிது அதற்குச்
செவ்வியதாகாமையு முடையது என்றவாறு.
யாதோ எனின், உருபேற்றலும் பெயரதிலக்கணம். அவ்வுரு
பேற்றலை யுடையதாகாது எனலுமாம்.
ஒரோ பெயரென்பது என்னை? நீயிர் என்பது பெயர் ;
பெயராயினும், நீயிரை என்று உருபேலாது. பிறவும் அன்ன. (7)
70.
கூறிய முறையி னுருபுநிலை திரியா
தீறுபெயர்க் காகு மியற்கைய வென்ப.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உருபேற்றலும்
பெயரதிலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
மேல் அவைதாம், ஐ ஒடு கு இன் அது கண் என்றோதிய
முறையாற் கிடந்த உருபு முறைமையிற் றிரியாதே பெயரது ஈற்றுக்கண்
வந்து * நிற்கும் இயல்பினையுடைய என்றவாறு.
வரலாறு :
சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின்,
சாத்தனது, சாத்தன்கண் எனவரும்.
‘நிலைதிரியாது’ என்றது, இவை இடைச்சொல்லாகலால், தம்மீறு
திரிதல் என்னும் இலக்கணமுடையகொல்லோ எனின், அவை இல
என்றற்குக்