Primary tabs

கூறினான் என்பது. அன்றியும் முன்னர் வேற்றுமை மயங்கியலுள்,
‘கு - ஐ ஆன்என வரூஉம் இறுதி
அவ்வொடு சிவணும்’
(வேற். மயங். - 25.)
என்று செய்யுட்கண் திரிபு கூறுபவாகலானும் அது சொல்லினார்
என்பது. (8)
* நிற்றல் இயல்பு -- எனவும் பாடம்.
71.
பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழினிலை யொட்டு மொன்றலங் கடையே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் அது,
பெயர்க்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் நுதலிற்றாகலின்.
உரை :
பெயர்ச்சொல் காலந் தோன்றா ; தொழிற்பெயராயிற் காலம்
தோன்றும் என்றவாறு.
வரலாறு :
சாத்தன் என்பது காலந்தோன்றாது, உண்டான் என்பது
காலந்தோன்றிற்று. மற்றுத் தொழிற் பெயரெல்லாங் காலந்தோன்றும்.
அற்றன்று, பெயர்ச்சொல் காலந் தோன்றா எனவே, தொழிற் பெயர்
காலந்தோன்றுதலும் தோன்றாமையும் உடைய என்பதாம்.
இனி ஒரு கருத்து :
தொழில் நிலைப் பெயர்ச்சொல்
காலந்தோன்றா, காலம் ஒட்டுந் தொழிற்பெயர்
அல்லாதவிடத்து
என்றவாறு.
காலந்தோன்றாதன :
உண்டல், தின்றல் என்பன ; அவை அத்
தொழிலின்மேல் நின்ற பெயர். இனிக் காலம் ஒட்டும் தொழிற்பெய
ராவன : உண்டான், தின்றான் என்பன ; இவை அத் தொழில்
செய்வான்மேல் நின்ற பெயர். (9)
72.
இரண்டாகுவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
யெவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்
பவ்விரு முதலிற் றோன்று மதுவே
காப்பி னோப்பி னூர்தியி னிழையி
னொப்பிற் புகழிற் பழியி னென்றா
பெறலி னிழவிற் காதலின் வெகுளியிற்
செறலி னுவத்தலிற் கற்பி னென்றா
வறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலி
னிறுத்தலி னளவி னெண்ணி னென்றா
வாக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலி
னோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா
வன்ன பிறவு மம்முதற் பொருள
வென்ன கிளவியு மதன்பால வென்மனார்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இஃது இரண்டாம்
வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
இரண்டாம் எண்ணு முறைமைக்கண்ணது ஐ என்னும் பெ