Primary tabs

பயரையுடைய வேற்றுமைச் சொல் ; அது யாண்டு வரினும்
வினையும்
வினைக்குறிப்பும் என அவ்விரண்டையும் தனக்குத் தோற்று
நிலமாக உடைத்து என்றவாறு.
அவ்விரண்டும் நிமித்தமாகத் தோன்றும் எனினும் அமையும்.
‘மரத்தைக் குறைத்தான்’ என்பது வினைபற்றிவந்தது.
‘குழைய யுடையன்’ என்பது வினைக்குறிப்புப் பற்றி வந்தது.
‘அதுவே’ என்பது அவ் விரண்டாம் வேற்றுமை தானே என்று
தெரித்தவாறு.
இனி, அவ் வினையும் வினைக்குறிப்பும் பற்றி, அது வருமாற்றுக்கு
உதாரணப் பகுதி காட்டுதும் :
ஊரைக் காக்கும், கிளியை யோப்பும், யானையை யூரும், எயிலை
யிழைக்கும், தாயை ஒக்கும், ஊரைப் புகழும், நாட்டைப் பழிக்கும்.
என்றா என்பது எண்ணிடைச் சொல்.
ஊரைப் பெறும், ஊரை யிழக்கும், மனைவியைக்
காதலிக்கும்,
படையை வெகுளும், ஊரைச் செறும், தாயை யுவக்கும், நூலைக்
கற்கும்.
என்றா என்பது எண்ணிடைச் சொல்.
ஞாணை யறுக்கும், மரத்தைக் குறைக்கும், நெல்லைத் தொகுக்கும்,
வேலியைப் பிரிக்கும், பொன்னை நிறுக்கும், அரிசியை
அளக்கும்,
அடைகாயை எண்ணும், ஊரை யாக்கும், வாய்க்காலைச் சாரும்,
நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும், செய்யை
நோக்கும், கள்ளரை
யஞ்சும், நாட்டைச் சிதைக்கும் எனவரும்.
என்றா என்பன எண்ணிடைச் சொற்கள்.
ஈண்டு நின்ற ‘இன்’களெல்லாஞ் சாரியை ஆயின.
‘பிறவும்’ என்றது இவையல்ல பிறவும் என்றவாறு.
வினையும் வினைக்குறிப்பும் பற்றி வருவன வெல்லாம் இரண்டாம்
வேற்றுமைப் பொருள்.
அவை :
விரலை முடக்கும், நாவினை வளைக்கும் என்பன
போல்வன வினை.
ஊரை யின்புடையான் என்பது போல்வன வினைக்குறிப்பு.
‘அம் முதற்பொருள் என்ன கிளவியும் அதன் பால என்மனார்’
என்பது - அவ்