Primary tabs

‘அப்பொருட் கிளவி’ என்பது, ஈண்டு
ஏற்ற பொருளல்லனவும்
வேற்றுமைக்கு உரிமை காட்டுவான் சொல்லினான் என்பது.
ஏற்றபொருண்மை விதந்து கூறினார் என்பது
சிறப்புநோக்கி.
பிறவும் அதன்பால ஆவன :
‘பண்ணுக்குத் தக்கது பாடல் ;’ ‘பூவிற்குத் தக்கது வண்டு’
என்பனபோல்வன.
இன்னெல்லாஞ் சாரியை. (12)
75. ஐந்தாகுவதே
இன் னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
யிதனி னிற்றிது வென்னு மதுவே
வண்ணம் வடிவே யளவே சுவையே
தண்மை வெம்மை யச்ச மென்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை யென்றா
முதுமை யிளமை சிறத்த லிழித்தல்
புதுமை பழமை யாக்க மென்றா
வின்மை யுடைமை நாற்றந் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதலென்
றன்ன பிறவு மதன்பால வென்மனார்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், முறையானே ஐந்தாம்
வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
ஐந்தாம் எண்ணு முறைமைக்கண்ணது இன்
என்னும்
பெயரையுடைய வேற்றுமைக் கிளவி ; இப்பொருளின் இத்தன்மைத்து
இப்பொருள் என்பதனைப் பயப்பவரும் அது என்றவாறு.
வரலாறு : ‘காக்கையிற் கரிது களம்பழம்’ என வரும்.
இதனின் என்பது காக்கையின் என்பது ;
இற்று என்பது கரிது
என்பது ; இது என்பது களம்பழம் என்பது. எனவே, பொரூஉப்
பொருளைத் தனக்குப் பொருளாக வுடைத்து என்றவாறு.
ஐந்தாம் வேற்றுமை நான்கு பொருள் உடைத்து,
பொரூஉப்பொருளும் நீக்கமும் எல்லையும் ஏதுவும் என.
அவற்றுள், பொரூஉப் பொருளை எடுத்துக்கூறினார்
சிறப்புடைமையின். ஒழிந்தனவற்றைப் போக்கிச் சொல்லுதும்.
வண்ணம்
‘காக்கையிற் கரிது களம்பழம்’ என்பது.
வடிவு :
‘இதனின் வட்டம் இது’ என்பது.
அளவு :
‘இதனின் நெடிது இது’ என்பது.
சுவை :
‘இதனிற் றீவிது இது’ என்பது.
தண்மை :
‘இதனிற் றண்ணிது இது’ என்பது.
வெம்மை :
‘இதனின் வெய்யது இது’ என்பது.
அச்சம் :
‘கள்ளரின் அஞ்சும்’