Primary tabs

என்பது.
‘என்றா’ என்பது எண்ணிடைச் சொல்
நன்மை :
‘இதனின் நன்று இது’ என்பது.
தீமை :
‘இதனிற் றீது இது’ என்பது.
சிறுமை :
‘இதனிற் சிறிது இது’ என்பது.
பெருமை :
‘இதனிற் பெரிது இது’ என்பது.
வன்மை :
‘இதனின் வலிது இது’ என்பது.
மென்மை :
‘இதனின் மெலிது இது’ என்பது.
கடுமை :
‘இதனிற் கடிது இது’ என்பது.
‘என்றா’ என்பது எண்ணிடைச் சொல்.
முதுமை :
‘இவனின் மூத்தான் இவன்’ என்பது.
இளமை :
‘இவனின் இளையான் இவன்’ என்பது.
சிறத்தல் :
‘இவனிற் சிறந்தான் இவன்’ என்பது.
இழித்தல் :
‘இவனின் இழிந்தான் இவன்’ என்பது.
புதுமை :
‘இவனிற் புதியன் இவன்’ என்பது.
பழமை :
‘இவனிற் பழையன் இவன்’ என்பது.
ஆக்கம் :
‘இவனின் ஆயினான் இவன்’ என்பது.
‘என்றா’ என்பது எண்ணிடைச் சொல்.
இன்மை :
‘இவனின் இலன் இவன்’ என்பது.
உடைமை :
‘இவனின் உடையன் இவன்’ என்பது.
நாற்றம் :
‘இதனின் நாறும் இது’ என்பது.
இவையெல்லாம் பொரூஉப்பொருள்.
தீர்தல் :
‘ஊரிற் றீர்ந்தான்’ என்பது ; இது நீக்கம்.
பன்மை :
‘இவரிற் பலர் இவர்’ என்பது.
சின்மை :
‘இவரிற் சிலர் இவர்’ என்பது.
இவையும் பொரூஉப்பொருள்.
பற்றுவிடுதல் :
‘ஊரிற் பற்றுவிட்டான்’ இதுவும் நீக்கம் என்பது.
‘அன்ன பிறவும்’ என்றதனால் எல்லைப்
பொருளும், ஏதுவும்
கொள்க.
எல்லை :
‘கருவூரின் கிழக்கு’
‘மருவூரின் மேற்கு’ என்பன.
ஏது :
‘முயற்சியிற் பிறத்தலின் ஒலிநிலையாது’ என்பது. (13)
76.
ஆறாகுவதே
அது வெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினு மிதன திதுவெனு கிழமையிற்
மன்னகிளவிக் கிழமைத்ததுவே
யியற்கையி னுடைமையின் முறைமையிற்
செயற்கையின் முதுமையின் வினையினென்றா
கருவியிற் றுணையிற் கலத்தின் முதலி
னொருவழி யுறுப்பிற் குழூஉவி னென்றா
தெரிந்துமொழிச் செய்தியி னிலையின் வாழ்ச்சியிற்
றிரிந்துவேறு படூஉம் பிறவு மன்ன
கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி
யாறன் பால வென்மனார் புலவர்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், முறையானே ஆறாம்
வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
ஆறாம் எண்ணுமுறைமைக்கண்ணது அது என்னும்
பெயரையுடைய வேற்றுமைச்சொல் ; தன்னொடு தொடர்ந்ததோர்
பொருளையும் தன்னின் வேறா