Primary tabs

யதோர் பொருளையும் இதனதிது என்று கிழமை செப்பிநிற்றல்
ஆறாம் வேற்றுமையது இலக்கணம் என்றவாறு.
அதுவே என்பது அப்பொருளை விரிப்பான் தெரித்தவாறு.
‘இதனதிது’ என்னுங் கிளவிக்கிழமைத்து
என்னாது, ‘அன்ன’
என்றதனான், இதற்குப் பிறிதுமொரு பொருள்
உண்டு என்க.
அஃதியாதோ வெனின், அவன அவள என்னும்
ஈற்றகரம். தன்னினும்
என்புழித் தற்கிழமை ஐந்து வகைப்படும், ஒன்று பலகுழீஇய
தற்கிழமையும்,
வேறு பலகுழீஇய தற்கிழமையும், ஒன்றியற் கிழமையும்,
உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாய கிழமையும் என.
ஒன்று பலகுழீஇய தற்கிழமையது :
‘எட் குப்பை’ என்பது.
வேறு பலகுழீஇய தற்கிழமையது :
‘படையது குழாம்’ என்பது.
ஒன்றியற் கிழமையது :
‘நிலத்தினது கலம்’ என்பது.
உறுப்பின் கிழமையது :
‘யானையது கோடு’ என்பது.
மெய்திரிந்தாகிய கிழமையது :
‘எள்ளினது சாந்து’ என்பது.
பிறிதின் கிழமை இது போலப் பகுதிப்படாது. இனி, அவ்விரண்டு
கிழமையும் ஒட்டுமாறு காட்டுதும்.
இயற்கை :
‘சாத்தன தியற்கை’ என்பது.
உடைமை :
‘சாத்தன துடைமை’ என்பது.
முறைமை :
‘ஆவினது கன்று’ என்பது.
கிழமை :
‘சாத்தனது கிழமை’ என்பது.
செயற்கை :
‘சாத்தனது செயற்கை’ என்பது.
முதுமை :
‘அவனது முதுமை’ என்பது.
வினை :
‘அவனது வினை’ என்பது.
கருவி :
‘சாத்தனது வாள்’ என்பது.
துணை :
‘அவனது துணை’ என்பது.
கலம் :
‘சாத்தனது கலம்’ என்பது.
கலம் என்பது ஒற்றிக் கலத்தை.
முதல் :
‘சாத்தனது முதல்’ என்பது.
ஒருவழி யுறுப்பு :
‘யானையது கோடு’ என்பது.
குழூஉ :
‘படையது குழூஉ’ என்பது.
தெரிந்துமொழிச்செய்தி :
‘கபிலரது பாட்டு’ என்பது.
நிலை :
‘சாத்தனது நிலை’ என்பது.
வாழ்ச்சி :
‘சாத்தனது வாழ்ச்சி’ என்பது.
திரிந்து வேறுபட்டது :
‘எள்ளினது சாந்து’ என்பது.
‘சாத்தனது சொல்’ என்பதும் அது.
பிறவும் என்பது புறனடை.
கூறிய மருங்கிற் றோன்றும் கிளவி ஆறன்பால
என்பது
இருகிழமையும்பற்றி வருவனவும் பிறவும் அதன் பால என்றவாறு. (14)
77. ஏழாகுவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினை