Primary tabs

செய் யிடத்தி னிலத்திற் காலத்தி
னனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே
கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல்
பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ
முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ
வன்ன பிறவு மதன்பால வென்மனார்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், முறையானே ஏழாம்
வேற்றுமை யுணர்த்துதல் நுதலிற்று.
உரை : ஏழாம் எண்ணு முறைமைக்கண்ணது கண் என்னும்
பெயரையுடைய வேற்றுமைச் சொல், வினைசெய்யிடமும் நிலமும்
காலமும் என்பன மூன்று பொருட்கண்ணும் வரும் அது என்றவாறு.
வினைசெய்யிடம் :
‘தட்டுப்புடைக்கண் வந்தான்’ என்பது.
நிலம் :
‘மாடத்துக்கண் இருந்தான்’ என்பது.
காலம் :
‘மாரியுள் வந்தான்’ என்பது.
இனி, அவ் வேற்றுமையுருபு பலவாகலின், அவற்றை விரிக்கின்றார்.
அவை வருமாறு :
ஊர்க்கண்ணிருந்தான்,
ஊர்க்காலிருந்தான், ஊர்ப்புறத்திருந்தான்,
ஊரகத்திருந்தான், ஊருளிருந்தான்,
சான்றோருழைச் சென்றான்,
மாடத்தின்கீ ழிருந்தான், மாடத்தின்மே லிருந்தான், ஏர்ப்பின்
சென்றான்,
‘காட்டுச்சா ரோடும்,’ ஊரய லிருந்தான், ஊர்ப்புடை
யிருந்தான்.
தேவகை என்பது திசைக்கூற்று : அது, ‘வடக்கண் வேங்கடம்,
தெற்கண்குமரி’ என வரும்.
எனாஅ என்பது இடைச்சொல்.
தேர்முன் சென்றான், சான்றோரிடை யிருந்தான், கோயிற்கடைச்
சென்றான், தந்தைதலைச் சென்றான்,
கைவலத் துள்ளது கொடுக்கும்,
கையிடத் திருந்தான் எனவும் வரும்.
‘அன்ன பிறவும்’ என்றதனால், ‘கிழவோ
டேத்து’ என்னுந்
தொடக்கத்தன கொள்க. (15)
78. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
யீற்றுநின் றிய