Primary tabs

லுந் தொகைவயிற் பிரிந்தே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், வேற்றுமைக்கெல்லாம்
கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : அக் கூறிய வேற்றுமைகள் தொக்கு முடியவும் வேண்டும் ;
அத் தொக்க வேற்றுமையுருபு விரியுங்கால் யாண்டு நின்று புலப்படுமோ
வெனின், மொழியீற்றுக்கண்ணே புலப்படும் என்றவாறு.
மற்று, ‘ஈறு பெயர்க்காகும்’ (வேற்றுமை-8)
என்புழி விளங்காதோவெனின், விளங்காது ;
ஆண்டு, அது, உருபு
பெயரதிறுதி வந்து நிற்கும் என்றார் ; அங்ஙனம் நின்ற உருபு தொகும்.
தொகுத்தல் என்பது புலப்படாமை யன்றே ; மற்று அது பின்பு
புலப்படுங்கால் தான் நின்ற ஈற்றே புலப்படும் என்பது
சொல்லவேண்டும் என்பது. (16)
79. பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கு
மெல்லாச் சொல்லு முரிய வென்ப.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும்
வேற்றுமைக்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : உருபு தொக்கும் விரிந்தும் நிற்கும் என்றார், அவ்
வுருபேயும் அன்று, ஆண்டுப் பிறசொற்களும் உள, அவ் வுருபேபோல
வந்து
ஒட்டநிற்பன ; அவையெல்லாம் அவ் வுருபேபோல ஆண்டே
தொகுத்தலும் விரித்தலும் உடையன என்றவாறு.
குதிரைத்தேர் என்பது, குதிரையாற் பூட்டப்பட்ட தேர் ; ஆன்
என்பது ஆண்டு உருபு ; பூட்டப்பட்டது என ஆண்டு உருபல்லது.
ஆண்டு உருபு தொக்கு நின்றாங்கே நிற்கவும் அமையும், விரித்துக்
காட்டவும் அமையும் என்பது.
‘பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்’ என்பது,
பலவாற்றானும் பொருள் ஏற்ப வந்து ஒட்டுவன என்றவாறு. (17)
இரண்டாவது வேற்றுமையியல் முற்றிற்று.