Primary tabs

பெறவே. குற்றித்தன்மை
ஆண்டு இல்லை ஆயிற்று. ஆண்டு இல்லாத
குற்றித் தன்மையன் அல்லன் மகன் ஆதலான், அஃது அல்லாதான்மேல்
அண்மை ஏற்றுதலே ஆசிரியர் கருத்தென்று உணர்க. இனிக் குற்றி
என்று துணியினும், இஃது ஒக்கும். உம்மை, எண்ணும்மை. (25)
வண்ணச்சினைச்சொல் அமையுமாறு
26.
அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.
இது வண்ணச்சினைச் சொற்கண் மரபு கூறுகின்றது.
(இ-ள்.) அடை
சினை முதல் என மூன்றும் - பண்புச் சொல்லும்
சினைச்சொல்லும் முதற்சொல்லும் என்ற
மூன்றும், முறை மயங்காமை
நடைபெற்று இயலும் - கூறப்பட்ட முறை
மயங்காமை வழக்கைப்
பொருந்தி நடக்கும், வண்ணச்சினைச்சொல் -
வண்ணம் முதலாகிய
பண்புகளொடு தொடர்ந்த சினைச்சொல்லை உடைய முதற்சொல், எ-று.
மீட்டும்
‘வண்ணச்சினைச்சொல்’ என்றது, அச்சொற்குப் பெயர்
கூறிற்று.
(எ-டு.) செங்கால் நாரை, பெருந்தலைச் சாத்தன் என வரும். வழக்கினுள் மயங்காது எனவே, செய்யுளுள்,
‘கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய்வன் காக்கையும் கூகையும் கூடி’
(புறம். 238. 1-3)
என
மயங்கியும் வருமாயிற்று.
சினையொடு முதற்கு
ஒற்றுமையுடைமையான் முதலோடும் இயைந்தன.
‘பெருந்தோள் சிறுநுசுப்பின் பேரமாக்கண் பேதை’
என்பதும் அவ்வாறே மயங்கி வந்தது, செய்யுளாதலின். ‘பெருவழுதுணங்
காய்’ என்பது பெருமை முதன்மேலே கூறுதலின், சொல்லுவான் கருத்து
வேறாயிற்று. இன்னும் ‘வழக்கினுள்
மயங்காது,’ என்றதனாற் ‘சிறு
பைந்தூவி’ (அகம். 57) எனச் சினையொடு குண