தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   501


ம்  இரண்டு அடுக்கல் செய்யுளாறென்க. ‘இளம் பெருங்கூத்தன்’ என்பது
சினையின்மையின் வேண்டியவாறு வந்தது. (26) 

பால் திணை வழுவமைதி

27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொற் கிளவி;
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.
 

இது பால் வழுவும், திணை வழுவும் அமைக்கின்றது. 

(இ-ள்) ஒருவரைக்   கூறும்  பன்மைக்  கிளவியும் - ஒருவனையும்
ஒருத்தியையும்   சொல்லும்  பன்மைச்  சொல்லும்,  ஒன்றனைக் கூறும்
பன்மைக் கிளவியும் - ஒன்றனை உயர்திணைப் பன்மையாகச் சொல்லும்
பன்மைச்  சொல்லும்,  வழக்கின்  ஆகிய உயர்சொற் கிறவி - வழக்கின்
உளவாகிய  உயர்த்துச்  சொல்லுஞ்  சொல்லாம்;  இலக்கண  மருங்கிற்
சொல்  ஆறு அல்ல - இலக்கண முறைமையான் சொல்லும் நெறியல்ல,
எ-று. 

‘வழக்கின்  ஆகிய’  எனவே,  வழுவமைதி பெற்றாம். உயர்சொல் -
உயர்க்குஞ்  சொல். ஒருவனையுந் ‘தாம் வந்தார்,’ என்ப; ஒருத்தியையுந்
‘தாம் வந்தார்,’ என்ப. ஒன்றனையுந் ‘தாம்வந்தார்’ என்ப. 

(எ-டு.) யாம் வந்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார், என வரும். 

‘தாம்வந்தார் தொண்டனார்’ என்ப்து, உயர்சொல் குறிப்பு நிலையின்
இழிபு விளக்கிற்று. 

‘இலக்கண  மருங்கிற்  சொல்லாறு  அல்ல,’  என்ற மிகையான், ஓர்
எருத்தை  ‘எந்தை வந்தான்’,  எனவும்,  ஓர்  ஆவை  ‘எம் அன்னை
வந்தாள்,’ எனவும், 

‘கொடுங்கோல் கோவலர் பின்னின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாயர்.’

(முல்லைப் .15,16) 

எனவும்  ஒப்புமை  கருதாது  காதல்பற்றி உயர்த்து வழங்கலும், ‘கன்னி
நறுஞாழல் (சிலப். 7:9)  கன்னி  எயில்’  எனவும், ஓர் எருத்தை ‘நம்பி’
எனவும்,  ஒரு  கிளியை ‘நங்கை’  எனவும், அஃறிணையை உயர்திணை
வா

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:18:33(இந்திய நேரம்)