Primary tabs

பல பொருள் ஒரு சொல், எ-று. (52)
வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்
53.
அவற்றுள்,
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினுந்
தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே.
(இ-ள்.)
இஃது அவற்றுள் வினை வேறுபடுமாறு கூறுகின்றது.
அவற்றுள் வினை வேறுபடூஉம்
பலபொருள் ஒரு சொல் -
அவ்விரண்டனுள்ளும் வினையான் வேறுபடும் பலபொருள் ஒருசொல்,
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்-ஒரு பொருட்கே சிறந்த
வினையானும் இனத்தானுஞ் சார்பானும்,
பொருள் தெரிநிலை தேறத்
தோன்றும்-பொருள் தெரி நிலைமைக்கண் பொதுமை நீங்கித் தெளியத்
தோன்றும், எ-று.
‘மா’ என்பது,
ஒரு சார் விலங்கிற்கும் மரத்திற்கும் வண்டிற்கும் பிற
பொருட்கும் பொது. ‘குருகு’
என்பது, ஒரு பறவைக்கும் உலை
மூக்கிற்கும் வளைக்கும் பிற பொருட்கும் பொது.
‘மா பூத்தது.’- இது வினை.
‘மாவும் மருதும் ஓங்கின.’- இஃது இனம்.
கவசம் புக்கு நின்று, ‘மாக்கொணா’ என்பது சார்பு.
ஒரு
சாதிக்கண் அணைந்த சாதி,
இனம்; ஒருவாற்றான்
இயைபுடையது சார்பு.
‘ஒன்றென முடித்தல்’
என்பதனான், ‘இம்மா வயிரம், வெளிறு,’ என
வேறுபடுக்கும் பெயருங் கொள்க.
‘கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும்’ (அகம்.330 : 1)
என்றாற்போலச்
சில பொருளை ஒழித்துச் சில பொருள் மேல் நிற்றல்
உரையிற்கொள்க.
இனமுஞ் சார்பும் பின்வரும் வினையொடு கூடி அல்ல