Primary tabs

து பொருள் முடியாமையின், அவையும் வினை வேறுபட்டனவேயாம்.(53)
மேலதற்கு ஒரு புறனடை
54. ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்.
இது, மேலிற் சூத்திரத்திற்கொரு புறனடை கூறுகின்றது.
(இ-ள்.) ஒன்றுவினை
மருங்கின் ஒன்றித் தோன்றும் - மேற்கூறிய
வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல்,
வினையான் வேறுபட
நில்லாது பொதுவினை கொண்டு
பொதுமைப்பட நின்றுழியும்,
வினையான் வேறுபட்டாற்போல ‘இன்னது இது’ என வேறுபட நிற்றலும்
வழக்கினகத்து உண்டு, எ-று.
‘மா வீழ்ந்தது,’
என்பது, வீழ்தல் வினை எல்லாவற்றிற்கும் பொது
வேனும், ‘இவ்விடத்து இக்காலத்து இவன் சொல்லுகின்றது இம்மாவினை,’
என ஒன்றனை உணர்த்தி நின்றவாறு
காண்க. என்றது, வினை
வேறுபடும் பலபொருள் ஒருசொல்,
ஒருகால் வினை வேறுபடாத
பலபொருள் ஒருசொற்போல நிற்கும் என்றவாறு. (54)
வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல்
55.
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்.
இது,
நிறுத்தமுறையானே வினை வேறுபடாப்
பலபொருள்
ஒருசொல்லாமாறு கூறுகின்றது.
(இ-ள்.) வினை வேறுபடாஅப் பலபொருள்
ஒருசொல் - வினையான்
வேறுபடாத பலபொருள் ஒருசொல், நினையுங்காலைக்
கிளந்தாங்கு
இயலும் - ஆராயுங்காலத்து இன்னது இது எனக் கிளக்கப்பட்டு அவ்
வாராய்ச்சி உடையவிடத்து நடக்கும், எ-று.
‘கன்று நீர் ஊட்டுக,’
என்றவழிக் கேட்டான் இன்ன கன்று என்பது
அறிய வாராதவழி ‘ஆன்கன்று, பூங்கன்று’ என்று கிளந்தே சொல்