Primary tabs

லுக என்றவாறு.
‘நினையுங்காலை’
என்றதனாற், கருமச் சிதைவு உள்வழிக் கிளந்து
கூறுக என்பது கொள்க.
‘கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறார்.’ (குறுந்.24:1)
என்றவழிக் கருமச்சிதைவு இன்மையின் கிளத்தல்வேண்டா வாயினவாறு
காண்க.
அன்றி,
‘ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல்’
என ஒரு சூத்திரமாக்கி. ‘வேறுபடாத வினைகொண்டவழி வேறுபடாது
தோன்றும் வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல்,’ என்று பொருள்
கூறி, வினைவேறுபடும் பலபொருள்
ஒரு சொல்லாகிய ‘மா’
என்பதுதானே ‘வீழ்ந்தது’ என்னும் பொதுவினை கொண்டவழி வினை
வேறுபடாததாய் நின்றதற்கு ‘மாமரம் வீழ்ந்தது,’ எனக் கிளந்து கூறுக
என்றார் சேனாவரையர். அங்ஙனம் பொருள்கூறின், ‘வினை வேறுபடாப்
பலபொருள் ஒருசொல்’ என வேறொரு சொல் இன்றி, ‘ஆயிரு வகைய’
என்பதனொடு மாறுபடும் என மறுக்க. (55)
தெரித்து மொழிந்து மரபுவழுக் காத்தல்
56. குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி.
இது, மரபு வழுக் காக்கின்றது.
(இ-ள்.) குறித்தோன்
கூற்றம் - ஒருபொருள் வேறுபடக்குறித்தோன்
கூற்று ஆற்றல் முதலியவற்றான் விளங்