தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   529


தும். 

‘அடிமை’  என்பது,  ‘அடிமை  புகுத்தி  விடும்  (குறள். 608)  என
உயர்திணை இருபாலும் உணர்த்தும். 

வன்மையாவது,  ஒருதொழிலை  வல்லுதல்.  அது,  சொல் வன்மை
நன்று  என  உயர்திணை  இருபாலும்  உணர்த்தும்.  ஈண்டு  வன்மை,
வலியன்று. 

‘விருந்து  ஆவது   விருந்தெதிர்  கோடலும்’ 1 (சிலப். 16: 73) என
உயர்திணை  இருபாலையும்   உணர்த்திற்று.  ‘ஆங்கவை விருந்தாற்றப்
பகல் அல்கி’ (கலி.66:4)என அஃறிணைக்கும் இது வரும். 

குழு  ஆவது ‘குழுவின் பெயர்’ (167) எனவும், ‘ஐம்பெருங் குழுவும்
எண்பே  ராயமும்’  (சிலப் 5: 157)  எனவும்  உயர்திணை  இருபாலும்
உணர்த்தும். 

பெண்மையாவது,   கட்புலனாயதோர்   அமைதித்   தன்மை. அது,
‘பெண்மை அடுத்த மகளென் கிளவி’ என்பதனான் உணர்க. இது ‘மகள்’
என்பது   பெண்பால்  உணர்த்தப்  ‘பெண்மை’  என்பதும் பெண்பால்
உணர்த்து  மேற்கூறியது  கூறலாம்  ஆதலின்,  ஆசிரியர்க்கு  இதுவே
பொருளாயிற்று.  ‘ஆண்மை அடுத்த மகன்’ என்பதற்கும் இஃது ஒக்கும்.
அது, ‘பெண்மை  சுட்டிய  உயர்திணை  மருங்கின்’ (4) என்பதனானும்,
‘பிறனியலாள்  பெண்மை  நயவா  தவன்.’  (குறள்.147)  என்பதனானும்
உணர்க. இப் பெண்மை, அமைதித் தன்மையே அன்றிப் பெண்பாலாகிய
தன்மையும்  உணர்த்தும்  என்பது கருதி, ஆசிரியர், ‘பெண்மை சுட்டிய
எல்லாப்  பெயரும்’  (182)  என  விரவுப்  பெயர்க்கண்   உடம்பொடு
புணர்த்து ஓதினார். உயர்திணை ஆண்பாற்கு உரித்தன்றிப் பெண்

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:23:48(இந்திய நேரம்)