தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   532


வத்தையே  உணர்த்தின.  ‘தெய்வம்’  என்பது,  ‘தெய்வம்  சுட்டிய
பெயர்நிலைக்  கிளவியும்’ (4)   என்பதனான்   உயர்திணை   என்பது
பெற்றாம். இவை எல்லாந் ‘தெய்வம்’ என்னும் உயர்திணைப் பொருளை
உணர்த்தின வேனும்  ‘தெய்வம்’ என்னுஞ்  சொல் அஃறிணை வாசகம்
ஆதலின், அதற்கு ஏற்ப அஃறிணை முடிபே கொள்ளும் என்றார்.
 

இச்சொற்கள்,    கூறுகின்றபொழுதே     தத்தம்     உயர்திணைப்
பாற்பொருளே தோற்றுவித்து நிற்றலின், ஆகுபெயரன்மை உணர்க.
 

‘இவற்குக்  காலம்  ஆயிற்று,’  என்றது  காலக்கடவுளை.   உலகம்
பசித்தது,’ என்றது உலகத்தாரை. ‘உயிர் போயிற்று; உடம்பு நுணுகிற்று’-
இவை  உயர்திணை  முடிபு  கொள்ளா  என   விலக்குதலின்,  ஈண்டு
உயர்திணைக்கே  உரிய  ஆயின.   என்ன?   ‘அறஞ்செய்து  துறக்கம்
புக்கான்’ ‘உயிர்  நீத்து  ஒரு மகன் கிடந்தான்.’ என உயிரும் உடம்பும்
அவரின் வேறன்றி  அவராக  உணரப்பட்டு  உயர்திணைக்கேற்ற முடிபு
கோடலின்   மக்களே  ஆயின.  இவை   இங்ஙனம்   உணர்த்தலின்,
ஆகுபெயரல்ல.  தெய்வம்  செய்தது - இதனைப்  பால்வரை  தெய்வம்
என்றார், இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும் வகுத்தலின்.
‘வினை விளைந்தது.’ -இஃது இரு வினைத் தெய்வம். ‘பூதம் புடைத்தது’
(சிலப். 5 :134),  ஞாயிறு  பட்டது,  திங்கள் எழுந்தது. ‘சொல் நன்று.’ -
இது நாமகளாகிய  தெய்வம்.  ‘பிறவும்’  என்ற தனான், பொழுது நன்று;
யாக்கை  தீது;  விதி வலிது; கனலி  கடுகிற்று; மதி நிறைந்தது; வெள்ளி
எழுந்தது;

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:24:22(இந்திய நேரம்)