Primary tabs

(குறள். 848) என இழிபுங் கொள்க.
விறற்சொல் ஆவன விறலை உணர்த்தும் ‘பெருவிறல், (கலி. 81:10)
அருந்திறல்’ (சிலப். 13: 65) போல்வன.
‘அன்ன பிறவும்’ என்றதனான். ‘வேந்து (குறள். 550), வேள் (முருகு,
273), குரிசில் (முருகு. 276) அமைச்சு (குறள். 631), புரோசு’ (பதிற். 7
பதிகம்) என ஒருபாற்கு உரிய காட்டலும் ஒன்று. இருபாற்கு உரியன
வந்துழிக் காண்க.
இவையெல்லாம் ‘பண்பு’ என்று விளக்கிய, பண்பு வாய்ப்பாட்டான் ஓதினார். இவை உயர்திணைப் பண்புப்பெயராய் அப்பொருளையும் ஒருங்கு உணர்த்தினவேனும், அஃறிணைச் சொற்கொண்டு முடியும் என வழுவமைத்தார். (57)
*(பாடம்) கொள்ளவும்.
*(பாடம்) பொய்ச்சீத்தை
இதுவும் அது
58.
காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா உயர்திணை மேன.
இதுவும் திணைவழுக் காக்கின்றது.
(இ-ள்.) காலம் உலகம்
உயிரே உடம்பே பால் வரை தெய்வம்
வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் ஆயீரைந்தொடு
அன்ன பிறவும் - காலம் முதலாகச் சொல் ஈறாகச் சொல்லப்பட்ட
அப்பத்தும் அத்தன்மையன பிறவுமாகிய, ஆவயின் வரூஉம் கிளவி
எல்லாம் -அவ் வுயர்திணைக் கண் வரும் சொல் எல்லாம், உயர்திணை
மேன பால் பிரிந்து இசையா - உயர்திணைச் சொல் ஆயினும்
உயர்திணைக்கண் பால் பிரிந்து இசையா; அஃறிணைப்பாலவாய்
இசைக்கும், எ-று.
இச்சூத்திரத்துக் கூறியவற்றுள் உலகமும் உயிரும் உடம்பும் ஒழிந்தன
எல்லாம் தெய்வ