Primary tabs

ஆனும், ஆறாவதற்கு அகர ஈறும் ஆதுவுங் கொள்க. (3)
எழுவாய் வேற்றுமை
66.
அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே.
இது, முறையானே எழுவாய் வேற்றுமை கூறுகின்றது.
(இ-ள்.) அவற்றுள் - மேற்கூறிய வேற்றுமை எட்டனுள், எழுவாய்
வேற்றுமை - முதல் வேற்றுமையாவது, பெயர் தோன்றும் நிலையே -
பெயர்ப்பொருள் அறுவகைப்பட்ட பயனிலையும் தன்கண் தோன்ற
நிற்கும் நிலைமை, எ-று.
அஃது உருபும் விளியும் ஏலாது நிற்கும் நிலையது ஆயிற்று.
(எ-டு.) மக்கள், ஆ என வரும்.
‘இதனை முற்கூறியது என்னை?’ எனின்,
‘சாத்தன் குடத்தைக்
கையான் வனைந்து கொற்றற்குக் கொடுத்தான்’ என வினைமுதல் நின்று
ஏனையவற்றை நிகழ்த்துதல் வேண்டுதலின், அவ்வினைமுதலாகிய
எழுவாயை முற்கூறினார்; அன்றியும் மேல் இரண்டாவது மூன்றாவது
என்று ஆளு மிடத்து இதனை முதல் வேற்றுமை என்றே
ஆளவேண்டுதலின், அப் பொருள் தருதற்கு முன்னிற் சூத்திரத்திற்
பெயரென்று கூறிய அதற்கே ‘எழுவாய் வேற்றுமை’ என்று வேறொரு
பெயர் கொடுத்தார். இதற்கு இப்பெயர் கூறிய அதனானே உருபும்
விளியும் ஏற்பனவற்றைப் பெயர் என்று வழங்குதல் பெற்றாம். அஃது,
‘ஈறு பெயர்க்கு ஆகும்’ என்றதனானும் உணர்க. (4)
எழுவாய் பயனிலை ஏற்குமாறு
67,
பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநி