Primary tabs

ரகமாவது, தொழிலை இயற்றுவிப்பது. ஞாபகமாவது, அறிவிப்பது.
இனி, ஆல் அகத்தியனால் தமிழ் உரைக்கப்பட்டது; வேலால்
எறிந்தான் எனவும், ஓடு ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ (குறள்.140)
‘காவோடு அறக்குளம் தொட்டானும்’ (திரிகடு.70) ‘நாவீற் றிருந்த புலமா
மகளோடு நன்பொற், பூவீற் றிருந்த திருமாமகள்’ (சீவக.30) எனவும்
வரும்.
‘இனிநனி பயக்கும் இதனான் என்னும்’ (தொல்.பொ.515)
இஃது ஆன் வந்தது. (12)
மூன்றாவதன் பொருள்பற்றி வரும் வாய்பாடுகள்
75.
அதனி னியறல் அதற்றகு கிளவி
அதன்வினைப் படுதல் அதனி னாதல்
அதனிற் கோடல் அதனொடு மயங்கல்
அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி
அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி
அதனோ டியைந்த ஒப்பல் ஒப்புரை
இன்னா னேது ஈங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.
இஃது, அதனை முடிக்க வரும் பொருள் வேறுபாடு கூறுகின்றது.
(இ-ள்.) அதனின் இயறல்-ஒன்றனான் ஒன்று பண்ணப்படுதல்
என்னும் பொருண்மை, அதற்றகு கிளவி-ஒன்றனான் ஒன்று தகுதல்
என்னும் பொருண்மை, அதன் வினைப்படுதல்-ஒன்றனான் ஒன்று
தொழிலுறுதல் என்னும் பொருண்மை, அதனின் ஆதல்-ஒன்றனான்
ஒன்று ஆதல் என்னும் பொருண்மை, அதனிற் கோடல்-ஒன்றனான்
ஒன்றைக் கோடல் என்னும்
பொருண்மை, அதனொடு
மயங்கல்-ஒன்றனோடு ஒன்று மயங்குதல் என்னும் பொருண்மை,
அதனோடு