தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   554


இயைந்த   ஒரு  வினைக்  கிளவி- ஒன்றனோடு ஒன்று இயைந்த ஒரு
வினை  ஆகல்  என்னும்  பொருண்மை,  அதனோடு இயைந்த வேறு
வினைக்கிளவி-ஒன்றனோடு   ஒன்று   இயைந்த  வேறு  வினையாகல்
என்னும்  பொருண்மை,  அதனோடு  இயைந்த  ஒப்பினை உரைத்தல்
என்னும் பொருண்மை, இன் ஆன் ஏது-இன்னும் ஆனுமாகிய
 

ஏதுப்     பொருண்மை,  என வரூஉம் - என்று சொல்லப்பட்டு வரும்
பத்தும்,   ஈங்கு   வரூஉம்   அன்ன   பிறவும்  -  வினை  முதலும்
கருவியுமாகிய    பொருளிடத்து    வரும்    அவைபோல்வன   பிற
பொருள்களும்,  அதன்பால  என்மனார்-அம்  மூன்றாவதன்  கூற்றன்
என்று கூறுவர் புலவர், எ-று.
 

(எ-டு.) மண்ணான்  இயன்ற   குடம்,  வாயான்  தக்கது  வாய்ச்சி,
அறிவான் அமைந்த சான்றோர்: இவை கருவி.
 

நாயாற்கோட்பட்டான், சாத்தனான்   முடியும்   இக்கருமம்:   இவை
வினைமுதல்.
 

வாணிகத்தான்   ஆயினான்,   காணத்தாற்கொண்ட  அரிசி: இவை
கருவி. இவை ஆன் உருபான் வந்தன.
 

எண்ணொடு     விராய  அரிசி,  ஆசிரியனொடு  வந்த மாணாக்கன்
‘மலையொடு பொருத மா அல் யானை’ (மலைக்க வினை இன்மையின்,
இது வேறு வினை ஆயிற்று.) ‘பொன்னோடு இரும்பனையர் நின்னொடு
பிறரே’  (பொன்னோடு  இரும்பை  உவமித்தலை  ஒப்பார் நின்னொடு
பிறரை உவமிக்கு மிடத்து என்ற
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:28:27(இந்திய நேரம்)